உலகக்கோப்பை தொடரில் இந்த பவுலரே இந்திய அணியின் சொத்து – சச்சின்

sachin

நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி தற்போது அந்த அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. நாளை வெலிங்டனில் முதல் டி20 போட்டி நடை பெற உள்ளது. நாளை மதியம் 12.30க்கு போட்டி துவங்குகிறது.

worldcup

இப்போது வரும் செய்திகள் அனைத்தும் இந்த உலகக்கோப்பை பற்றியே வருகிறது. தற்போது மேலும் ஒரு செய்தி சச்சின் தரப்பில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி உலகக்கோப்பை அணி குறித்து சச்சின் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

அதில் சச்சின் குறிப்பிட்டதாவது : வரும் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அனைத்து எதிரணிகளையும் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் நமது அணியில் இடம்பெற்று உள்ளனர். இதனால் இந்திய அணி மற்ற அனைத்து அணிகளுக்கும் சவாலாக விளங்கும்.

bumrah

மேலும், பும்ரா இந்த தொடரில் சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அவரை கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பார்த்து வருகிறேன். அவரது உழைப்பு, பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நிறையவே இருக்கிறது. எனவே, இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் சொத்தாக பும்ரா திகழ்வார் என்று சச்சின் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் பட்சத்தில் இந்த இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அவரே உலககோப்பையின் ஸ்டார் – கவாஸ்கர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்