ஆஸ்திரேலிய தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் பட்சத்தில் இந்த இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அவரே உலககோப்பையின் ஸ்டார் – கவாஸ்கர்

gavaskar

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த மாதம் இறுதியில் இந்த தொடர் ஆரம்பிக்க உள்ளது.

vijay

இந்த தொடரில் சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை களமிறக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நினைத்துள்ளது. அதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதன்படி, சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்தால் இளம் வீரரான ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு அளியுங்கள். அப்படி வாய்ப்பு அளித்தால் இவர் நிச்சயம் ஒருநாள் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்துவார். மேலும், உலககோப்பை தொடரில் அவர் இடம்பெற இது அவருக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

pant

மேலும், அவரின் திறமை அபரிவிதமானது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் சிறந்த வீரர் இல்லை, ஒருநாள் போட்டிகளிலும் அவர் சிறந்த வீரர் என்பது விரைவில் வெளிப்படும் என்று கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

முரளிதரன் பந்து வீசுகிறார். பீல்டர்கள் தயாராக நில்லுங்கள் என்று சாஹலை கலாய்த்த தல தோனி – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்