அவரைப்பற்றி பேசியது போதும். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் என்ன செய்து இருக்கவேண்டும் – பும்ரா கருத்து

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இந்திய அணி வீரரான உமேஷ் யாதவ் பந்துவீச்சு அமைந்தது. இதுகுறித்து பேசிய பும்ரா : உமேஷ் என்ன தவறு செய்து விட்டார் என்று எனக்கு புரியவில்லை. அவர் சரியான லென்த்திலே பந்துகளை தொடர்ந்து வீசினார். ஆனால், நேற்றைய ஆட்டம் அவருடையதாக இல்லை இதுபோன்ற பவுன்ஸ் இல்லாத மைதானத்தில் இந்த அளவு அவர் வீசியதே சிறப்பான ஒன்றாகும்.

Umesh

மேலும், பந்துவீசி விக்கெட் எடுத்தால் மட்டும் நல்ல பந்துவீச்சாளராக பெயர் எடுக்க முடியாது. தொடர்ந்து சீராக பந்துவீச வேண்டும். அதனை உமேஷ் சிறப்பாக செய்துவருகிறார். எனவே அவரை பற்றி பேசுவதை நிறுத்துங்களா என்று கேட்டுக்கொண்டார் பும்ரா.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

ஓய்வில் இருந்தபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே கோலி கூறிய பதில் என்ன தெரியுமா ?- வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -