ஓய்வில் இருந்தபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே கோலி கூறிய பதில் என்ன தெரியுமா ?- வீடியோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.

இந்த போட்டி துவங்கும்போது டாஸ் வெற்றிபெற்ற பின்ச் பேசியபிறகு போட்டி வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சுரேக்கர் கோலியிடம் ஓய்வின்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் கிரிக்கெட் போட்டிகளை பார்த்தீர்களா ? இல்லை மொத்தமாக சுவிட்ச் ஆப் ? என்று கேட்டார். அதற்கு சிரித்துகொண்டே கோலி பதிலளிக்க துவங்கினார். இதோ அந்த வீடியோ :

நான் இரண்டு போட்டிகளை பார்த்தேன். பிறகு பார்க்கவில்லை நிறைய என்னால் பார்க்க முடியாது. ஏனெனில் ஓய்வு தவிர்த்து எதுவும் வேண்டாம் என்று விளையாட வந்துவிட தோன்றும் அதனால் போட்டிகளை நான் பார்க்கவில்லை. இப்போது நான் ஓய்விற்கு பிறகு களமிறங்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

புல்வாமா ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்கள் – நெகிழவைக்கும் 2 நிமிட வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்