தொழிலில் லாபம் பெறுக பரிகாரம்

Vilakku

“உழைப்பே உயர்வு தரும்” மனிதராக பிறந்த அனைவருமே கடுமையாக உழைத்தால் மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை ஈட்ட முடியும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர். இந்த தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் செய்கிற தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் அதிகம் பெறவும் முன்னோர்களால் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Astrology

தொழில் சிறக்க பரிகாரம்

செய்யும் தொழில் மற்றும் வியாபாரங்களில் வெற்றி பெற நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன், “வாழைப்பழம், பேரிச்சம்பழம், முந்திரி, தேன், கல்கண்டு” போன்றவற்றை ஒன்றாக கலந்து “பஞ்சாமிர்தம்” தயாரிக்க வேண்டும். பின்பு உங்கள் பூஜையறையில் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு பஞ்சமுக தீபம் ஏற்றி, வணங்கி பஞ்சாமிர்தத்தை லட்சுமிக்கு நிவேதனம் வைத்து, அதை பிரசாதமாக உண்ண வேண்டும். பிறகு அந்த பிரசாதத்தை உங்களிடம் பணிபுரியும் பணியாளர்கள் உண்ண கொடுக்க வேண்டும். இந்த பரிகாரம் உங்கள் தொழிலில் எப்போதும் நஷ்டம் ஏற்படாமல் காக்கும். தினமும் இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் செய்யலாம்.

நவதானியங்களை எடுத்து ஒரு வெள்ளை துணியில் முடிந்து, உங்கள் தொழில், வியாபாரம் நடக்கும் இடங்களில் வாயிற்படிகளின் மீது கட்டி தொங்க விட வேண்டும். அதே போல் ஒரு நவதானிய முடிப்பை உங்கள் கடை கல்லா பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் கிடைத்து, அதன் மூலம் லாபம் பெருகும்.

Navathaniyam

தினமும் கடையை திறந்தவுடன் நன்கு பெருக்கி சுத்தம் செய்து, அங்கு கடவுளின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி, தூபங்கள் கொளுத்திய பின்பு, உங்கள் வியாபார, தொழில்களை மேற்கொள்ள வேண்டும். அமாவாசை தோறும் பூசணிக்காயை கொண்டு உங்கள் தொழில் வியாபாரம் நடக்கும் இடங்களை திருஷ்டி கழித்து உடைக்க வேண்டும்.

- Advertisement -

Pusanikkai

உங்களின் வியாபாரத்தில் தினந்தோறும் கிடைக்கும் பணத்தையும் அதில் கிடைக்கும் பெரிய லாப தொகையையும் தினமும் வீட்டிலிருக்கும் லட்சுமியின் படத்திற்கு முன் வைத்து வணங்கிய பின்பு அலமாரியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் என்றும் பணத் தட்டுப்பாடு வராமல் லட்சுமி தேவி அருள்புரிவாள்.

mahalakshmi

வருடத்திற்கு ஒரு முறை திருப்பதியில் திருச்சானூர் பத்மாவதி கோவிலுக்கு சென்று வணங்கி, பின்பு திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீநிவாசனை வணங்க வேண்டும். இந்த வேண்டுதல் உங்களின் செல்வ சேமிப்பை உயர்த்தும்.

இதையும் படிக்கலாமே:
எத்தகைய தீயதையும் போக்கும் அமானுஷ்ய பரிகாரம் பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pariharam for business in Tamil. It can also be called as Business development pariharam in Tamil or Tholil vetri pera valimuraigal.