பட்டன் தட்டை செய்வது இவ்வளவு ஈசியா? இந்த ரெசிப்பி இத்தனை நாட்களாக தெரியாமல் போய்விட்டதே.

button-thattai
- Advertisement -

சாதாரணமாக நம்முடைய வீடுகளில் தடை செய்தால் அது ஒரு சுவையில் இருக்கும். கடைகளில் மினி தட்டை என்று சொல்லப்படும் இந்த பட்டன் தட்டை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் நமக்கு இருக்கும். கடையில் கிடைக்கும் அதே ருசியில் நம்முடைய வீட்டிலும் இந்த தீபாவளிக்கு பட்டன் தடையை ட்ரை பண்ணிப் பார்க்கலாமா. சுலபமான முறையில் பட்டன் தட்டை செய்வது எப்படி என்ற ரெசிபி உங்களுக்காக.

முதலில் ஒரு குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாசிப்பருப்பு – 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடலை பருப்பு – 2 ஸ்பூன், இந்த பருப்பு வகைகளை ஒன்றாக போட்டு ஒரு முறை நன்றாக கழுவிவிட்டு, இதில் நல்ல தண்ணீரை பருப்பு மூழ்கும் அளவிற்கு ஊற்றி, 4 லிருந்து 5 விசில் வைத்து பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். விசில் வந்ததும் பருப்பை மசித்து வைத்துக் கொள்ளுங்கள். பருப்பில் அதிகமாக தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரை வடித்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீர் நமக்கு தேவை படாது.

- Advertisement -

மசித்த பருப்பை அகலமான ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த பருப்புடன் 1 கப் அளவு பச்சரிசி மாவை போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது 200 கிராம் அளவு பச்சரிசி மாவை இந்த பருப்பு மசியலோடு சேர்த்து, இதனுடன் வெண்ணெய் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எள்ளு – 1 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைய வேண்டும்.

button-thattai1

ஏனென்றால் பருப்பை வேகவைத்து மசித்து வைத்ததில் கட்டாயமாக கொஞ்சம் தண்ணீர் இருக்கும். அதில் மாவை பிசைந்து பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து, இந்த மாவை கொஞ்சம் கெட்டிப் பதத்தில் தட்டை மாவு போல பிசைந்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்த மாவில் தேவைப்பட்டால் நசுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.)

- Advertisement -

பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து ஒரு அழுத்து அழுத்தி அப்படியே எண்ணெயில் போட்டு எடுத்தாலும் சூப்பரான பட்டன் தட்டை தயாராக கிடைக்கும். ஒவ்வொன்றாக தட்டி போட கஷ்டமாக இருந்தால், சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கவரில் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு அடுக்கி, அடிப்பாகம் தட்டையாக இருக்கும் கிண்ணத்தை இந்த தட்டை மாவின் மீது வைத்து லேசாக அழுத்தி, எல்லாத் தடைகளையும் தயார் செய்து வைத்து விட்டு, அடுப்பில் எண்ணெய் ஊற்றி வைத்து மிதமான தீயில் காய்ச்சி, இந்த தடைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தாலும் சரிதான். அது அவரவர் விருப்பம்.

button-thattai2

உங்களுக்கு எந்த வேலை சுலபமாக இருக்கிறதோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த தட்டை சாதாரணமாக செய்யும் தட்டை போல ரொம்பவும் மெல்லிசாக இருக்கக்கூடாது. கொஞ்சம் தடிமனாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். தடிமனாக இருக்கும் தடையை எண்ணெய்யில் பக்குவமாக பொரித்து எடுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மொறுமொறுவென கிடைக்கும்.

button-thattai4

எண்ணெயை நன்றாக சூடு செய்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு தட்டையைப் போட்டு சிவக்க பொரித்து எடுத்தால் சரியான பக்குவத்தில் கிடைக்கும். உங்க வீட்ல இந்த தீபாவளிக்கு இந்த மினி தட்டையை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -