தங்கம் நிறைய வாங்கணும்! ஏமாறாமலும் வாங்கணும்! என்ன செய்வது?

- Advertisement -

தங்கம்! தங்கம்! தங்கம்! எத்தனை முறை கூறினாலும் அலுத்துப் போகாத ஒரு வார்த்தை. எவ்வளவு தங்கத்தை வாங்கி சேர்த்துக் கொண்டாலும் மனதில் இருக்கும் ஆசை குறையவே குறையாது. எவ்வளவுதான் வாங்கினாலும் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் நமக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அலுத்துப் போகாது. தங்கத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால், அனைவரையும் சுண்டி இழுக்கும் ‘தங்கம்’. இப்படிப்பட்ட மனநிறைவை கொடுக்கும் இந்த தங்கத்தை எந்த நாளில் வாங்குவது? எந்த நேரத்தில் வாங்குவது? எப்படி பார்த்து வாங்குவது? ஏமாறாமல் வாங்கினால் தானே அது நமக்கு லாபம். தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவை படியுங்கள்!

Gold

தங்க நகைகளை வாங்குவதாக இருந்தால் புதன், வியாழன், வெள்ளி, சனி இந்த நான்கு தினங்களில் வாங்குவது மிகவும் சிறந்தது. இந்த நான்கு தினங்களில் ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், உத்திரம், அனுஷம், திருவோணம், அவிட்டம், பரணி, இந்த நட்சத்திரங்கள் வரும் சமயத்தில் வாங்கினால் மிகவும் சிறப்பு. ‘சனிக்கிழமை, ரோகிணி’ நட்சத்திரமும் சேர்ந்து வரும் சமயத்தில் தங்கம் வாங்குவது மிக மிக சிறப்பாக சாஸ்திரத்தில்  கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நான்கு கிழமைகளிலும், குறிப்பிட்ட இந்த நட்சத்திரங்களில் சேர்ந்து புதன் ஓரை, சுக்கிர ஓரை நேரத்தில் தங்கம் வாங்குவது நமக்கு மேலும் மேலும் தங்கம் சேரும் ஒரு நல்ல வழியை காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தங்கத்தை வாங்கிய பின்பு திங்கள், புதன், வியாழன், வெள்ளி இந்த நாட்களில் வரும் அமிர்த யோகம், சுக்கிர ஹோரை நேரத்தில் அணிந்து கொள்வது மிகவும் சிறப்பான ஒன்று. அடுத்ததாக பிரதமை திதி, பௌர்ணமி, சஷ்டி, ஏகாதசி, பஞ்சமி, தசமி இந்த திதி வரும் நாட்களில் அணிந்து கொண்டால் நம்மிடம் தங்கம் மேலும் மேலும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Gold rate in Saravana stores

வாங்கிய தங்கத்தை அடமானம் வைக்கும் நிலை ஏற்பட்டால் திங்கள்கிழமை அல்லது வியாழக்கிழமை இந்த இரு தினங்களில் அடமானம் வைக்கலாம். கட்டாயமாக புதன்கிழமை அன்று சனிக்கிழமை அன்றும் அடமானம் வைப்பதை தவிர்ப்பது நல்லது. உங்களது நகையை இரவல் கொடுக்க கூடாது. சூழ்நிலை, உங்களது நகையை யாருக்காவது இரவலாக கொடுக்க வேண்டுமென்றால், கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி இந்த நட்சத்திரங்களில் கட்டாயமாக அவர்களுக்கு நகையே இரவலாக கொடுப்பதை தவிர்த்து கொள்வது மிக மிக நல்லது. இது உங்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

- Advertisement -

உங்களுடைய ஜாதக கட்டத்தில் குரு 6 அல்லது 8ல் இருந்தால், கட்டாயமாக உங்கள் வீட்டில் தங்கம் தங்குவதில் சிறு சிரமங்கள் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் 3 மாதம் பவுர்ணமி தினத்தன்று, சிவன் கோவிலில் இருக்கும் பைரவரை வழிபட்டால் நல்ல பரிகாரமாக இருக்கும்.

தங்க நகைகளை ஏமாறாமல் வாங்குவதற்கு சில டிப்ஸ்.
நம் தங்க நகை வாங்கும்போது சேதாரம் என்று ஒரு தொகையை போடுவார்கள். இந்த சேதாரம் என்பது நாம் வாங்கும் நகைகளின் வடிவத்தைப் பொறுத்தது. பொதுவாக டிசைன் குறைவாக இருக்கும் நகைகளுக்கு சேதாரம் குறைவாகத்தான் இருக்கும். அதிக வேலை நுணுக்கங்கள் உடைய நகைகளுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். நிச்சயமாக ஒரு கடைக்கு, ஒரு கடை இந்த சேதாரம் மாறும். குறைந்தபட்சம் 2% திலிருந்து சேதாரம் ஆரம்பிக்கப்படும். கணக்குப்படி பார்த்தால் ஒரு பவுனுக்கு, ஒரு கிராம் சேதாரம் என்பதை நியாயமான ஒன்று. அதற்கும் குறைவாக சேதாரம் ஒரு கடையில் வசூலிக்கப்படுகிறது என்றால், அந்த தங்களுடைய தரமும் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

24 கேரட் தங்கம் என்பது சுத்தமான தங்கம். இதில் ஆபரணம் செய்ய முடியாது. 916 தங்கம் என்பது, 91.6% தூய தங்கமாக இருக்கும். அதாவது அதில் மீதமுள்ள சதவீதம் மட்டுமே மற்ற உலோகங்கள். 22 கேரட் தங்கத்தில், மற்ற 2 கேரட் உலோகக்கலவை சேர்க்கப்பட்டிருக்கும். இப்படி சேர்த்தால் மட்டுமே நகையை வடிவமாக மாற்ற முடியும். இதில் 19, 18, 17, என்று கேரட் குறைந்து செல்ல செல்ல தங்கத்தின் தரமும், அளவும் குறைந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

gold

தங்க நகை வாங்கும்போது ரசீது என்பது அவசியமான ஒன்று. வரி வேண்டாம் என சிலர் ரசீது இல்லாமல் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் பின்னாட்களில் நகையில் தரத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், ரசீது இருந்தால்தான் அந்த நகை காரரிடம் நம்மால் போய் கேட்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

முடிந்தவரை தங்கநகை அணிந்திருக்கும் போது கவரிங் நகைகளை சேர்த்து அணியவேண்டாம். ஏனென்றால் கவரிங் நகைகளோடு உராசும் தங்க நகைகளானது தேய்ந்து போகிறது. பழைய நகைகளை மாற்றும்போது தேய்மானம் கணக்கிடப்படுவது இதை வைத்துதான். முடிந்தவரை செண்ட், பவுடர் போன்ற வாசனை நறுமணப்பொருட்கள் தங்கத்தின் மீது படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

Today Gold rate

கூடுமானவரை தங்கத்தை வாங்கிய கடையிலேயே, விற்பது, மாற்றுவது சிறந்த ஒரு முறையாகும். சில நேரம் நாம் வாங்கிய தங்கம் கருத்து போகும். இதற்கு காரணம் அதிகப்படியான பொடி சேர்ப்பது தான். தங்கத்தை ஒட்டுவதற்காக, வேலைப்பாடுகள் செய்வதற்காக பயன்படுத்துவது ‘பொடி’ என்று கூறுவார்கள். இந்த பொடியானது வெள்ளி மற்றும் செம்பு சேர்த்து தங்கத்தின் சதவீதத்தை குறைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பொடி அதிகமாகும்போது தங்கத்தின் நிறம் சீக்கிரம் மாறிவிடும். ஆகவே நம்பிக்கை, நாணயம் அதிகமாக உள்ள கடைகளில் தங்கம் வாங்குவது சிறந்தது. காலம் காலமாக நம்பிக்கையாக, ராசியாக நீங்கள் யாரிடம் தங்கம் வாங்குகிறார்களோ, தொடர்ந்து அவர்களிடமே வாங்கினால் ஏமாறுவதிலிருந்து நிச்சயமாக தப்பித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தீராத கஷ்டங்களைக் கூட சுலபமாக தீர்த்து வைக்கும் ‘கலச சொம்பு’.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thangam vanga nalla neram Tamil. Thangam adagu pogamal irukka. Thangam semippu Tamil. Thangam sera Tamil.

- Advertisement -