உங்கள் பெயரின் முதல் எழுத்து C என்றால் உங்களை பற்றி இதோ

Alphabet-C

நியூமராலஜி அறிவியல் என்பது எண்களின் முக்கியத்துவம் மற்றும் அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுதான். எழுத்துக்கள் மற்றும் எண்களுக்கு இடையேயான கூட்டாய்வை பகுப்பதன் மூலம் உங்கள் குணநலன்கள், தனித்திறன்கள், குறிக்கோள்கள் எண்ணங்கள், உங்கள் இயல்பான திறமைகள், உங்கள் முக்கிய பண்புகள் மற்றும் பிற நபர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த முடியும்.

Alphabet

உங்கள் பெயரின் முதல் எழுத்து C யாக இருந்தால்? உங்கள் குணநலன் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதை அறிய கீழே பாருங்கள்!

C என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு இருக்கும் இந்த நபர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புபவர்கள். தன்னை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர்கள். பட்டாம் பூச்சிகளைப் போல் வாழ விரும்புபவர்கள். இவர்கள் வாழ்க்கை வாழ தெரிந்தவர்களாக இருப்பார்கள். எல்லாவற்றையும் நேர்மறையாக சிந்திக்க கூடியவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். இவர்கள் எப்போதும் வெளிப்படையாக, உற்சாகமாக இருப்பவர்கள். இவர்களை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு நடந்துகொள்வார்கள். இவர்கள் சிறந்த பேச்சாளர்கள். இவர்களுடைய உரையாடல்கள் பெரும்பாலும் தெள்ளத் தெளிவாக இருக்கும். இயற்கையிலேயே இவர்கள் வெள்ளந்தி ஆனவர்கள். அதே நேரத்தில் அதிக திறமையும் அவர்களிடம் இருக்கும். எளிதாக அனைவரிடமும் பழகி அவர்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். கெட்டிக்காரர்கள். அதனால் அனைவரிடமும் நற்பெயர் வாங்கி வைத்திருப்பர். தன்னை ஒருவர் காயப்படுத்தி விட்டால் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. மீண்டும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இவர்களிடம் கிடையாது.

Alphabet-C

நீங்கள் சிறந்த நகைச்சுவையாளராக இருப்பீர்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக்கூட மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். இவர்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை பழிவாங்க இவர்கள் கொள்ளும் யுக்தியை யாரும் சிந்தித்து இருக்க முடியாத ஒன்றாக இருக்கும். இவர்கள் யூகிப்பது மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கும். அவர்கள் தனித் திறமையாளர்கள்.

- Advertisement -

இவர்களிடம் எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதை ஓரளவு யூகிக்கும் திறமை இருக்கும். அது அவர்களுக்கே தெரியாமல் இருக்கலாம். ஏதேனும் ஒரு ரூபத்தில் அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்பதை இவர்களால் உணர முடியும்.

Alphabet-C

இந்த நபர்கள் பெரும்பாலும் செலவாளியாக இருப்பார்கள். இவர்களிடம் காசு இருந்தால் அது தங்கவே தங்காது. அதற்காக இவர்கள் ஊதாரியும் கிடையாது. கையிலிருக்கும் இருப்புக்கு ஏற்றவாறு இவர்களுக்கு ஏதாவது ஒரு செலவு வந்து கொண்டே இருக்கும். இவர்கள் மிகவும் கலகலப்பானவர்கள் அதனால் இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகமாக பரந்து விரிந்திருக்கும். வீண் வம்புக்கு இவர்கள் போக மாட்டார்கள். வந்த சண்டையும் ஒரு கை பார்த்து விடுவார்கள். யாரிடம் பழகினாலும் நேர்மையுடனும் உண்மையுடனும் பழகுவார்கள். ஒற்றுமையை விரும்புபவர்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இருப்பவர்கள். இவர்கள் மிகவும் அன்பானவர்கள். ஒருவர் மீது பாசம் வைத்து விட்டால் அதில் முழுமையான அன்பை வெளிப்படுத்தி விடுவார்கள். எந்த ஒளிவு மறைவும் இவர்களிடம் இருக்காது.

இவர்கள் தங்களுக்கான ஒரு காதலனோ காதலியோ தேடுவது மட்டுமல்ல வாழ்க்கையில் துணையை தேடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு உரியவராக இருக்க வேண்டும் என்று கருதிக் கொண்டு இருப்பவர்கள். தங்களின் குண நலனுக்கு ஏற்றவாறு ஒரு நல்ல துணையாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவர்கள். அப்படி ஒருவர் கிடைக்கும்வரை அவசரப்படாமல் தேடிக்கொண்டே இருக்கும் பொறுமை இவர்களிடம் இருக்கும். சரியான நபரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள். வெறும் பொழுதுபோக்கிற்காக இவர்கள் யாரிடமும் பழகக் கூடியவர்கள் அல்ல.

 Alphabet-C

இவர்களிடம் இருக்கும் குறை என்று குறை சொன்னால் அது பழிவாங்கும் குணம் மற்றும் இரக்கமற்ற குணமாக இருக்கலாம். எதையும் ஆழ்ந்து சிந்திக்காமல் மேலோட்டமாகவே சிந்திக்க கூடியவர்கள். எவரையும் எளிதில் நம்புவது இவர்களது பலவீனம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் பெயரின் முதல் எழுத்து B என்றால் உங்களை பற்றி இதோ

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Name astrology in Tamil. Jathagam in Tamil. Name namerology in Tamil. Name astrology palangal in Tamil.