கோவிலில் யார் பெயரில் அர்ச்சனை செய்வது நல்லது தெரியுமா ?

0
8714
- விளம்பரம் -

ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள் அதிக முக்கியத்துவம் பெற்ற அர்ச்சனை என்னும் வார்த்தை சமஸ்கிருத சொல்லான அர்ச்சா என்ற வார்த்தையில் இருந்தே தோன்றியதாக கூறப்படுகிறது. அர்ச்சா என்ற வார்த்தையின் உண்மையான பொருள் சிலை என்பதே. சிலையின் முன்பு நாம் மந்திரங்களை ஓதுவதால் அது அர்ச்சனை என்றாகிவிட்டது.

archanai kudai

பொதுவாக கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்வர். இன்னும் சிலர் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வர். ஆனால் கடவுளின் பெயரில் எப்போது அர்ச்சனை செய்யவேண்டும், நம் பெயரில் எப்போது அர்ச்சனை செய்யவேண்டும் என்பது குறித்து பலர் அறிந்திருப்பதில்லை.

Advertisement

கடவுளை மகிழ்விக்க மந்திரங்களை ஓதி அந்த சமயத்தில் நாம் அவரை மனதில் நிலை நிறுத்தி நம்முடைய குறைகளை அவரிடம் கூறுவதும், அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதும் தானே அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.

archanai

நாம் சில வேண்டுதல்களோடு கோயிலிற்கு செல்லும் சமயங்களில் நமது பெயரில் அர்ச்சனை செய்து அவரிடம் மன்றாடி வேண்டிக்கொள்வது தான் முறை. ஆனால் நமது வேண்டுதல்கள் நிறைவேறிய சமயத்தில் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்து அவருக்கு நன்றி தெரிவிப்பதே சிறந்தது.

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

Advertisement