மகான்கள் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா? வைக்கக்கூடாதா? வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

sai-baba-kanji-periyava

பூஜையறையில் என்னென்ன பொருட்களை மற்றும் படங்களை வைக்க வேண்டும்? வைக்கக் கூடாது? என்பதற்கு நிறைய ஆகம விதிமுறைகள் உள்ளன. அது போல் இறந்தவர்களின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது! என்பதும் சாஸ்திரம். இதில் பலருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால், மனித உருவில் வாழ்ந்த நாம் தெய்வமாக போற்றும் சில மகான்கள் படங்களை வீட்டில் வைத்து கொள்ளலாமா? வைத்துக் கொள்ளக் கூடாதா? பூஜையறையில் வைத்துக் கொள்ளலாமா? வைத்துக் கொள்ளக் கூடாதா? என்பது போன்ற சந்தேகங்கள் நிறைய பேருக்கு இருக்கின்றன.

pooja-room

மனித உருவில் வாழ்ந்த தெய்வங்களாக காஞ்சி மகாபெரியவர், சாய்பாபா போன்ற மகான்களின் புகைப்படங்களை இறந்தவர்களின் புகைப்படங்களாக கருதினால் அதை எப்படி பூஜை அறையில் வைக்க முடியும்? மகான்கள் மட்டுமல்ல ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் எவ்வளவோ அதிசயங்களை இந்த பூமியில் நிகழ்த்தியுள்ளனர். அவர்களை போற்றி வணங்குபவர்கள் இன்றும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைக்கலாமா? என்கிற சந்தேகமே தேவையில்லை. இவர்களின் படங்களை வீட்டில் வைத்து வணங்குவதால் நிறைய நன்மைகள் தான் உங்களுக்கு கிடைக்கும்.

பொதுவாகவே வீட்டில் வைக்க வேண்டிய முக்கிய படங்களில் குலதெய்வ படம், நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை, ராசிக்குரிய சித்தர், இஷ்ட தெய்வங்கள் போன்றவை இடம் பெற்றிருப்பது அவசியமாகும். உங்கள் ஜாதகப்படி நீங்கள் வணங்க வேண்டிய தெய்வங்களை முறையாக வணங்கி வந்தால் வாழ்க்கையில் உங்களை யாரும் வெல்ல முடியாத அளவிற்கு உயரத்தை நீங்கள் அடைய முடியும்.

Munivar

சித்தர்கள், மகான்கள், ரிஷிகள் போன்றவர்கள் இறந்தாலும் கூட இறவா நிலையை அடைந்தவர்கள்! என்பதை முதலில் நாம் அனைவரும் உணர வேண்டும். அவர்கள் இறந்தவர்கள் அல்ல! ஜீவசமாதி அடைந்தவர்கள். இவர்கள் இறந்தாலும் அவர்களுடைய ஆத்மா எப்போதும் அழியா நிலையை பெற்றிருக்கும். இதனால் அவர்களின் படங்களை இறந்தவர்களின் படத்திற்கு ஒப்பிடக்கூடாது.

- Advertisement -

அவர்கள் இறந்தவர்கள் அல்ல புண்ணிய ஆத்மாக்களாக மாறிய மனித கடவுள்கள். வீட்டில் உக்ர தெய்வங்களை தவிர சாத்வீகமாக இருக்கும் தெய்வ படங்களை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். அவற்றுடன் இது போன்ற மகான்கள், ரிஷிகள், சித்தர்கள், முனிகள் படங்களை உங்கள் மனதிற்கு விருப்பமான பக்தியுடையவர்களின் படங்களை தாராளமாக உங்கள் வீட்டு பூஜை அறையில் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அதனால் எந்த சாஸ்திர ஆகம விதிகளும் நீங்கள் மீறப் போவதில்லை. இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் கிடைக்கப் பெறும்.

Sai baba tamil song

பூஜை அறையில் முக்கிய படங்களை தவிர, தேவை இல்லாத படங்களை அடுக்கி குப்பை போல் சேர்த்து வைக்காதீர்கள். உங்களுக்கு என்ன தேவையோ? அதை மட்டும் வைத்துக் கொண்டால் போதும். இடம் இருக்கிறது என்பதற்காக எல்லா படங்களையும் வாங்கி அடிக்கி அவற்றை சுத்தம் செய்ய முடியாமல் தூசி படிய வைத்தால் பாவம் தான் வந்து சேரும்.

kanji periyavar

நிறைய படங்கள் பூஜை அறையில் இருந்தால் தான் உங்கள் பக்தி உண்மை என்று அர்த்தமாகும் என்பதெல்லம் இல்லை. பக்தியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். அது தான் மிகவும் முக்கியம். உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தூசி துரும்புகள் படிய விடலாம். ஆனால் பூஜை அறையில் தூசுகள் இன்றி வாராவாரம் சுத்தம் செய்து விடுவது வீட்டின் சுபீட்சத்தை நிலைத்து நிற்க செய்யும் என்பதை மட்டும் மனதில் பதிய வையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் கட்டில் கீழே என்ன இருக்கிறது? இதெல்லாம் இருந்தால் வீட்டில் பிரச்சனை தான் வரும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.