வீட்டில் சனீஸ்வரன் படத்தை வைத்து வணங்கலாமா?

sanibagavan

சனிபகவான் என்றாலே எல்லோருக்கும் அச்சம் தான் முதலில் வரும். அவரவர் செய்யும் பாவத்திற்கு ஏற்றவாறு தண்டனைகள் வழங்கும் நீதி மான் அவர். ஒருவருக்கு சனி திசை நடக்கும் சமயத்தில் சனிபகவானின் உக்ரத்தை குறைக்க, வீட்டில் சனிபகவானின் படத்தை வைத்து வழிபடலாமா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாக தெய்வங்களின் படங்களை மட்டுமே பூஜை அறையில் வைத்து வழிபடுவது சிறந்தது. நவகிரகங்கள் என்பவர்கள் கடவுள் வகுத்த பணிகளை செய்பவர்களே தவிர அவர்கள் தெய்வங்கள் கிடையாது.

இதனாலேயே கோவிலில் கூட நவகிரகங்களை தெய்வத்திற்கு நிகராக வைக்காமல் தனியாகவே வைத்துள்ளனர். எனவே குரு, ராகு, கேது, சுக்கிரன், சனீஸ்வரன் இப்படி எந்த நவகிரகங்களையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது. அதோடு சனீஸ்வரனின் படத்தையோ அல்லது சிலையையோ வீட்டில் வைத்து வழிபடுவது நற்பலன்களை தராது என்று சாஸ்திரம் கூறுகிறது.