4ஆவது விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய ஜோடி சாதனை – கான்பெர்ரா மைதானம்

aus

ஆஸ்திரேலியா அணி தற்போது இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

head

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 384 ரன்கள் அடித்தது. 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தொடக்கத்தில் ஆட்டம் கண்ட ஆஸ்திரேலிய அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பிறகு ஆஸ்திரேலிய அணியின் பர்ன்ஸ் மற்றும் ஹெட் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 308 எங்களை குவித்து அசத்தியது.

burns

ஹெட் 161 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பர்ன்ஸ் ஆட்டமிழக்காமல் 172 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக உள்ளதால் இந்த ஆட்டத்தினையும் வென்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே :

20ஆண்டுகளாக அணியில் இருந்து இரட்டைசதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் – சாதனை விவரம் இதோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்