20ஆண்டுகளாக அணியில் இருந்து இரட்டைசதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் – சாதனை விவரம் இதோ

womens-team

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ். இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணியில் உள்ளார்.

mithali raj

மித்தாலி ராஜ் 25 ஜூன் 1999ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகம் ஆனார். அதிலிருந்து இன்றுவரை இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இதுவரை 264 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் முதலி ராஜ் 200 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முதல் வீரர் 200 ஒருநாள் போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையினை பெற்றார். ஒருநாள் போட்டிகளில் 6500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதில் 7 சதமும் மற்றும் 51 அரைசதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட சச்சின் மற்றும் ஜெயசூர்யா ஆகியோரது கிரிக்கெட் அனுபவத்திற்கு ஒப்பானவர் என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அவரை பாராட்டி வருகிறது. சர்வதேச கிரிக்கெட் வாரியமும் மித்தாலி ராஜ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.

இதையும் படிக்கலாமே :

கோலி, தோனி நிச்சயம் அணிக்கு தேவை. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்கு இதுவே இரண்டாவது முறை – புள்ளி விவரம் இதோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்