வருகின்ற வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதா? அதன் விவரம் உள்ளே!

tirupathil
- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகின்ற 25ஆம் தேதி நடைபெற இருப்பதால் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பாக தேவஸ்தான அதிகாரி ஜவஹர் ரெட்டி அறிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா காரணமாக குறைக்கப்பட்டுள்ள டிக்கெட்டுகள் வரும் 24-ஆம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 3-ஆம் தேதி வரை முற்றிலுமாக இலவச தரிசன சேவையில் ரத்து செய்யப்பட்டுள்ளது பக்தர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் கூடுதல் தகவல்களை இப்பதிவின் மூலம் பார்ப்போம் வாருங்கள்.

thirupathi

டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி விழா திருப்பதியில் வெகு விமர்சையாக நடைபெற இருப்பதால் முதல் முறையாக பக்தர்களுக்கு சொர்க்கவாசல் வழியாக செல்ல 10 நாட்கள் வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர்நிலை அதிகாரிகள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய அவர்களுடன் 25ஆம் தேதியில் 6 பேர் மட்டுமே அனுமதிக்க உள்ளனர் என்பதையும் தெரிவித்துள்ளனர். இவர்கள் 25ஆம் தேதி அதிகாலையில் மூன்று மணி முதல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

திருப்பதியில் உள்ளூர் பக்தர்களுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் ஐந்து இடங்களில் பத்து கவுண்டர்கள் மூலமாக வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு திருப்பதியில் தரிசனம் செய்ய ரூபாய் 300 கட்டணத்தில் செலுத்தப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகள் 20 ஆயிரம் வரை வெளியிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 25ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 3ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். இலவச தரிசனத்தை ரத்து செய்துள்ளதால் அந்த நாட்களில் பக்தர்களால் திருப்பதியில் இலவசமாக தரிசனம் செய்ய முடியாது. 24-ஆம் தேதியிலிருந்து 3-ஆம் தேதி வரை தரிசன டிக்கெட்டுகள் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

thirupathi

பொதுவாக மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் இரண்டு நாள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் இந்த முறை பல்வேறு பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க தேவஸ்தான நிர்வாகிகள் 10 நாட்கள் வரை பரமபதவாசல் மூலமாக சென்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகளை கடந்த பதினோராம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

பத்து நாட்களுக்கு 2 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய ஆன்லைன் வழியாக தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இவர்களைத் தவிர நேரடியாக இலவச தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது.

perumal1

வைகுண்ட ஏகாதசி விழாவன்று உற்சவர்கள் உடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகள் மூலமாக தங்கத்தேரில் உலா வருவார்கள். துவாதசி விழாவின் பொழுது சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்காக பல்வேறு அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும், தட்டுப்பாடின்றி லட்டுகள் கிடைக்க ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்கிறது.

- Advertisement -