குடை மிளகாய் இருந்தா இட்லி தோசைக்கெல்லாம் ஏற்ற சுவையான இந்த சட்னியை டிரை பண்ணி பாருங்க. ரொம்பவே வித்தியாசமான இந்த சட்னியை உங்க வீட்ல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

capsicum chutney
- Advertisement -

இதுவரை நாம் எத்தனையோ வகையான சட்னி ரெசிபிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமாக ஒரு சட்னி ரெசிபியை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த சட்னி ரெசிபிக்கு தேவையான முக்கியமான பொருள் குடைமிளகாய். இந்த குடைமிளகாயை வைத்து நாம் கிரேவி வெரைட்டி ரைஸ் போன்றவற்றையெல்லாம் செய்திருக்கிறோம். ஆனால் இதே குடைமிளகாய் வைத்து சட்னி எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இதற்கு அடுப்பில் கடாய் வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன், 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு 10 பல் பூண்டு தோல் உரித்தது, 8 காய்ந்த மிளகாய், புளி சிறிய நெல்லிக்காய் அளவு இவையெல்லாம் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மீடியம் சைஸ் வெங்காயம், மீடியம் சைஸ் குடைமிளகாய், இரண்டு மீடியம் சைஸ் தக்காளி, இவை மூன்றையும் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மீண்டும் அடுப்பை பற்ற வைத்து அதே கடாய் வைத்து சூடானவுடன் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு பொரிய விடுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கிய பிறகு குடைமிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் பாதி அளவு வெந்த பிறகு தக்காளியை சேர்த்து தக்காளியும் பாதி அளவு வேகம் வரை வதக்கி கொள்ளுங்கள். தக்காளி குழைய வேண்டும் என்று அவசியம் கிடையாது.

- Advertisement -

இவை எல்லாம் வதங்கிய பிறகு அடுப்பை அனைத்து விட்டு இதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஏற்கனவே வறுத்து வைத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டாவதாக வதக்கி வைத்து வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்காலமே: இது தெரிஞ்சா இனி உங்க சமையல் கலையை கொஞ்சம் மாத்திபீங்க தானே? சூப்பர் கிட்சனுக்கு சூப்பரான 12 டிப்ஸ்!

அரைத்த இந்த சட்னியை தனியாக ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான குடைமிளகாய் சட்னி தயார். இப்படி செய்யும் போது குடைமிளகாய் பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த சட்னி இட்லி, தோசை சப்பாத்தி உப்புமா என எல்லாவற்றிற்கும் பொருத்தமான சைட் டிஷ் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -