இது தெரிஞ்சா இனி உங்க சமையல் கலையை கொஞ்சம் மாத்திபீங்க தானே? சூப்பர் கிட்சனுக்கு சூப்பரான 12 டிப்ஸ்!

chappathi-vatral
- Advertisement -

கலைகளில் சமையல் கலையும் மிக முக்கியமான ஒரு கலையாக இருக்கிறது. இதை பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி இன்று, பெரும்பாலான ஆண்களும் கையில் எடுத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சமையல் கலையில் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான சிறு சிறு குறிப்புகளும் உண்டு. அவற்றில் சிலவற்றை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குறிப்பு 1:
காலிஃப்ளவர் சமைக்கும் பொழுது அதன் பச்சை வாடை வராமல் இருக்கவும், நிறம் வெள்ளை வெளேர் என அப்படியே மாறாமல் இருக்கவும் சிறிதளவு பால் சேர்த்து சமைத்து பாருங்கள்.

- Advertisement -

குறிப்பு 2:
மைதா, கோதுமை, அரிசி, ரவை போன்றவற்றை பூச்சிகள், புழுக்களிடமிருந்து நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டி அதற்குள் போட்டு வையுங்கள் போதும்.

குறிப்பு 3:
பூரி சுடனும்னா இனிமே கொஞ்சம் மாவுடன் ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து பிசைந்து பின்னர் பூரி சுட்டு பாருங்க உப்பலாக வராத பூரியும் நன்கு உப்பி வரும்.

- Advertisement -

குறிப்பு 4:
மோர் குழம்பு செய்யும் பொழுது மோர் திரியாமல் இருக்க அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு சமைக்க வேண்டும். கடைசியாக நான்கு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கிப் பாருங்க அதன் ருசியே வித்தியாசமாக சூப்பராக இருக்கும்.

குறிப்பு 5:
மீன் சமைக்கிறப்போ சுற்றிலும் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு சமைக்க மீன் சீக்கிரம் கருகவும் செய்யாது, ருசி சூப்பராகவும் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
வாணலியில் மணலை போட்டு சூடேற்றி அதில் கடலையை வறுப்பது போல வீட்டில் செய்த கூழ் வற்றலையும் நீங்கள் வறுத்து எடுக்கலாம், எண்ணெய் இல்லாமல் பெரிதாக பொரியும்.

குறிப்பு 7:
கத்திரிக்காய் வைத்து கூட்டு, பொரியல் எது செய்தாலும் கொஞ்சம் கடைசியில் கடலை மாவை தூவி ஐந்து நிமிடம் கழித்து பிரட்டி இறக்கினால் மணம் கமகமன்னு டேஸ்ட்டியாக இருக்கும்.

குறிப்பு 8:
சப்பாத்திக்கு கோதுமை மாவு அரைக்கும் பொழுது கொஞ்சம் கொண்டைக் கடலையையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சுவை, மணம், சத்து அனைத்தும் கிடைக்கும்.

குறிப்பு 9:
வெண்டைக்காய் கறி செய்யும் பொழுது வழுவழுப்பு தன்மை எளிதாக நீங்க கொஞ்சம் தயிர் ஊற்றி செய்யுங்கள். தயிர் ஊற்றினால் வெண்டைக்காய் கறி சுவையும் அதிகரிக்கும்.

குறிப்பு 10:
பாலை தயிருக்கு உறை ஊற்றி வைக்கும் பொழுது பால் இளஞ்சூடாக இருந்தால் தான் தயிர் நன்கு தோயும். அதன் ருசியும் நன்றாக இருக்கும் எனவே ஆறிய பாலில் உறை உற்றாதீர்கள்.

குறிப்பு 11:
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் வேக வைக்கும் பொழுது முதலிலேயே உப்பு போட்டு விட்டால் சீக்கிரம் வேகாது. முக்கால் பகுதி வெந்த பிறகு உப்பு போடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கடைகளில் மைசூர் போண்டா புசுபுசுன்னு வர இதுதான் காரணமா. இந்த ஐடியா மட்டும் தெரிந்தால், மைசூர் போண்டா செய்வதில் நீங்கதான் குயின்.

குறிப்பு 12:
காலையில் செய்த ரவா உப்புமா மீந்து போய்விட்டால் அதனுடன் சிறிதளவு ரவை சேர்த்து வடையாக தட்டி போட்டு பாருங்கள், ருசியான ரவை வடை ரெடி!

- Advertisement -