இனி சட்னி செஞ்சா இப்படித் தான் செய்யணும் சொல்ற மாதிரி சூப்பரா சட்னி ரெசிபி. ஒரு வெங்காயம் தக்காளி இருந்தா அத வச்சு ரொம்பவே டேஸ்டியான ஒரு ஹெல்தியான சட்னியை ரெடி பண்ணலாம்.

carrot chutney
- Advertisement -

டிபன் வகைகளுக்கு எப்போதுமே நாம் சைட் டிஷ் ஆக முதலில் சட்னியை தான் தேர்ந்தெடுப்போம். அப்படி தேர்வு செய்யும் ஒரு சட்னி ரெசிபி ரொம்பவே சுவையாகவும், அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் செய்வது எப்படி என்பதை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் -1, தக்காளி – 1, பூண்டு – 5 பல், காய்ந்த மிளகாய் – 6, கேரட் -1,கடலைப் பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன், புளி – சின்ன நெல்லிக்காய் அளவு, கருவேப்பிலை, கொத்தமல்லி -1 கொத்து, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு -1 ஸ்பூன், உப்பு -1/4 டீஸ்பூன்.

- Advertisement -

இந்த சட்னி தாளிக்க முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். கேரட்டை மட்டும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை

இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்தப் பிறகு பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கிய பிறகு தக்காளி காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து ஒரு முறை லேசாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு கொத்து கறிவேப்பிலை நறுக்கி வைத்து கேரட், புளி இது இரண்டையும் சேர்த்த பிறகு ஒரு முறை நன்றாக கலந்து விட்டு வேக விடுங்கள். கேரட் குழைந்து வேகக் கூடாது பாதி அளவு வெந்தால் மட்டும் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே ஆற வைத்து கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் ஆற வைத்த வெங்காயம், தக்காளி, கேரட் எல்லாம் சேர்த்து உப்பையும் சேர்த்து பிறகு ஒரு குத்து கொத்தமல்லி சேர்த்து பின் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இதை ரொம்ப பைன் பேஸ்டாக அரைக்க வேண்டாம். காய்ந்த மிளகாய் ஆங்காங்கே தெரிவது போல் அரைத்துக் கொள்ளுங்கள். சுவையுடன் பார்க்கவும் நன்றாக இருக்கும். அரைத்த இந்த சட்னியை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஸ்பெஷல் தண்ணி தக்காளி குழம்பு ரெசிபி

இப்போது அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு கொஞ்சமாக கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு தாளிப்பை சட்னியில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். இந்த சட்னியை அப்படியே கெட்டியாக வைத்து தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுக்கு துவையல் போலவும் வைத்து சாப்பிடலாம். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். கேரட்டே பிடிக்காது என்று சாப்பிடாத குழந்தைகளுக்கு எல்லாம் இது போல அரைத்துக் கொடுத்தால், இதில் கேரட் சேர்த்து இருப்பதே தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- Advertisement -