சில மெர்சில் மட்டும் ஸ்பெஷலா கிடைக்கக்கூடிய தண்ணீர் தக்காளி குழம்பின் ரகசியம் இதுதானா? சுட சுட இந்த தக்காளி குழம்புக்கு சைடுல, வேற சைடு டிஷ்ஷால நிக்க கூட முடியாதுங்க.

idli5
- Advertisement -

சில ஸ்பெஷலான மெஸ், சில ஸ்பெஷலான ரோட்டு கடைகளில் இப்படிப்பட்ட தக்காளி குழம்பு கிடைக்கும். இட்லிக்கு மேலே சுடச்சுட இந்த தக்காளி குழம்பை வார்த்து அப்படியே சாப்பிட்டால், இட்லி அமிர்தம் போல இருக்கும். வெறும் தக்காளியை வைத்து தேங்காய் கூட அரைத்து ஊற்றாமல் சுவையான தக்காளி குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றிய ஸ்பெஷல் ரெசிபி இதோ உங்களுக்காக. யாரும் தவறவிடாமல் இட்லி தோசைக்கு இந்த சைட் டிஷ் ட்ரை பண்ணி பார்க்கணும்.

செய்முறை

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய தக்காளி பழம் – 4, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், தோல்உரித்த பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லி தழை – சிறிதளவு, சாம்பார் தூள் – 2 ஸ்பூன், மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, இந்த தக்காளி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி பெருங்காயம் – 1/4 ஸ்பூன் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் இதை இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

- Advertisement -

விசில் வந்ததும் பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து இதை நன்றாக ஆற வைத்து, தண்ணீரை வடிகட்டி உள்ளே இருக்கக்கூடிய வெங்காயம் தக்காளி மற்றும் மற்ற பொருட்களை எல்லாம் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, குக்கரில் வடிகட்டி எடுத்திருக்கும் தண்ணீரிலே ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

அரைத்த விழுது இப்போது அப்படியே இருக்கட்டும். இதை தாளித்து விட வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கருவேப்பிலை, போட்டு இந்த தாளிப்பில் குக்கரில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். இதை மிதமான தீயில் ஒரு மூடி போட்டு ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் கொதிக்க விட்டால் சூப்பரான தக்காளி குழம்பு தயார்.

- Advertisement -

உங்களுடைய தக்காளி கூடுதல் புளிப்பாக இருக்கிறது. தக்காளி குழம்பில் அதிகம் புளிப்பு தெரிகிறது என்றால், இதில் இறுதியாக ஒரு சின்ன ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து, அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழையை தூவி கொள்ளலாம். வெல்லம் வேண்டாம் என்பவர்கள் புளிப்பு சுவையோடு இந்த தக்காளி குழம்பை சாப்பிடலாம். தேவை என்றால் இதில் பொட்டுக்கடலை மாவை கரைத்து ஊற்றலாம்.

இதையும் படிக்கலாமே: திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லி பொடி செய்முறை

இல்லையென்றால் அரிசி மாவு கடலைமாவை கரைத்து ஊற்றி பச்சை வாடை போக்க கொதிக்க வைத்து சாப்பிடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் அதெல்லாம் சேர்க்காமல் வெறும் தக்காளி குழம்பை அப்படியே சாப்பிட்டு பாருங்கள். ருசி தூக்கலாக இருக்கும். இந்த ஸ்பெஷல் ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -