1/2 கேரட் இருந்தா போதும் 10 பைசா செலவு செய்யாமல் ஊரே மயங்கும் அழகி ஆகலாமே!

carrot-tomato-facial
- Advertisement -

வீட்டில் கேரட் இருந்தா போதும், நாமும் பேரழகாக எப்பொழுதும் ஜொலிக்கலாம். ஆயிரம் ஆயிரம் ஆக செலவு செய்து முகத்தை அலங்கரிக்கும் பலரும், வீட்டில் இருக்கும் சில குறிப்பிட்ட பொருட்களில் இருக்கும் சத்துக்களை ஏனோ மறந்து விடுகின்றனர். இந்த சத்துக்களில் நம்முடைய பேரழகு ஒளிந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கேரட்டில் இருக்கும் சத்து நம்மை எப்படி அழகி ஆக்கப் போகிறது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கேரட்டில் இருக்கும் விட்டமின்கள் மற்றும் நுண்ணுயிர் சத்துக்கள் அனைத்தும் நம்முடைய சருமத்தை பளபளன்னு பொலிவாக வெள்ளையாக மாற்றுவதற்கு உதவும். சருமத்தின் நிறத்தை கூட்டவும், மெலனின் உற்பத்தியை சரி செய்து கருமையை போக்கவும் உதவி செய்கிறது. அந்த வகையில் அரை கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் காய்ச்சி ஆற வைத்து குளிர்ந்த பால் தேவையான அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கேரட்டை போலவே அரை தக்காளியை கழுவி சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கவும், கரும்புள்ளிகளை அகற்றவும் பெருமளவு உதவி செய்கிறது.

முகத்தில் இருக்கக் கூடிய அழுக்குகளை நீக்கி பொலிவாக புத்துணர்வாக வைத்துக் கொள்ளும். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வெட்டி வைத்துள்ள கேரட்டையும், தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கெட்டியாக பேஸ்ட் போல அரைப்படுவதற்கு ஏற்ப, காய்ச்சி ஆற வைத்து குளிர்ந்த பாலை சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த பேஸ்டை முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் எல்லாம் தடவி நன்கு உலர விட்டு விடுங்கள். பேசியல் பிரஸ் பயன்படுத்தி தடவினால் நன்றாக இருக்கும். உலர்வதற்கு 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும். அதனால் 25 நிமிடம் கழித்து நன்கு உலர்ந்ததும், காய்ந்து வந்ததும் முகத்தை ஈரமான துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது போல தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வர முகம் பளபளன்னு பளிங்கு மாதிரி ஜொலிக்க ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
பார்லர் போகாமலே பத்தே நிமிஷத்திலேயே உங்க முகம் பளிச்சுன்னு மாற இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க. இனி பார்ட்டி ஃபங்ஷன் என எல்லா இடங்களிலும் நீங்க தான் பியூட்டி குயின்.

இதே போல கேரட்டை மட்டும் பயன்படுத்தியும் செய்யலாம். தக்காளியை பாலுடன் சேர்த்து தயாரித்தும் செய்யலாம். சாதாரணமாகவே தக்காளி ஜூஸ் முகத்தில் தடவி சர்க்கரையை தொட்டு ஸ்கிரப் செய்தால் முகத்தில் இருக்கக் கூடிய கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவை வேருடன் வெளியில் வந்துவிடும். முகம் சைனிங்காக சூப்பராக ஜொலிக்கும். அடிக்கடி கேரட் ஜூஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை முகத்திற்கு மட்டுமல்லாமல், உடலுக்கு உள்ளேயும் எடுத்துக் கொண்டாலும் சருமமானது தங்கம் போல தகதகவென மின்ன ஆரம்பிக்கும். கேரட் உடன் பப்பாளியை அரைத்து முகத்திற்கு பேக் போட்டு வந்தாலும் முகமானது பேரழகாக ஜொலிக்கும். இனி சமைக்கும் பொழுது காய்கறிகளை சமையலுக்கு மட்டும் அல்லாமல், உங்கள் முகத்திற்கும் பயன்படுத்தி பாருங்கள், நீங்களும் பத்து பைசா செலவு செய்யாமல் பேரழகா இருக்கலாம்.

- Advertisement -