- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபார்லர் போகாமலே பத்தே நிமிஷத்திலேயே உங்க முகம் பளிச்சுன்னு மாற இந்த ஃபேஸ் பேக் ட்ரை...

பார்லர் போகாமலே பத்தே நிமிஷத்திலேயே உங்க முகம் பளிச்சுன்னு மாற இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க. இனி பார்ட்டி ஃபங்ஷன் என எல்லா இடங்களிலும் நீங்க தான் பியூட்டி குயின்.

- Advertisement -

இப்போதெல்லாம் நிறத்தை கூட்டி கொள்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் வந்து விட்டது. அதிலும் இந்த அழகு விஷயத்தில் அழகு நிலையங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனும் அளவிற்கு உள்ளது. சில சமயங்களில் பார்லர் செல்லக் கூட நேரமில்லாத அளவிற்கு திடீரென பார்ட்டி பங்க்ஷன் என செல்ல வேண்டியது இருக்கும். அது போன்ற சமயங்களில் உடனடியாக நிறத்தை அதிகரிக்க கூடிய இந்த பேக்கை போடலாம்.

பத்து நிமிஷத்தில் முகம் பளிச்சென்று மாற ஃபேஸ் பேக்:
இந்த பேக்கை நீங்கள் பார்ட்டி செல்வதற்கு மணி நேரத்திற்கு முன்பாக போடலாம். ஒரு வேளை உங்களுக்கு நேரம் இருக்கிறது என்றால் மூன்று நாட்களுக்கு முன்பே தொடர்ச்சியாக போட்டால் உங்கள் அழகை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்னும் அளவிற்கு மாறி விடுவீர்கள். அவ்வளவு ஒரு எபெக்ட்டான பேக் வாங்க இது எப்படி போடுவது என்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த பேக்கை போடுவதற்கு முன்பாக முதலில் ஒரு பவுலில் காய்ச்சாத பசும் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காட்டனை நினைத்து உங்கள் முகம் முழுவதும் ஒற்றி எடுத்து துடைத்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கி விடுவதுடன், முகத்தில் உள்ள துளைகள் எல்லாம் திறந்து அடுத்து நீங்கள் போடும் பேக் முகத்திற்குள் செல்ல உதவியாக இருக்கும். ஒரு வேளை உங்களிடம் பசும்பால் இல்லாத சமயத்தில் ரோஸ் வாட்டர் அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் இரண்டில் எது வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பால் வைத்து முகத்தை துடைத்த பிறகு மறுபடியும் சுத்தமான தண்ணீர் வைத்து ஒரு முறை முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் புளிக்காத தயிர், கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இவை இரண்டையும் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டீஸ்பூன் முல்தானிமெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு வேளை உங்களுடைய முகம் வறட்சியானதாக இருந்தால் முல்தானிமெட்டி சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் சேர்த்து உங்கள் முகத்தில் இந்த பேக்கை தடவி பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு ஒரு பவுலில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து உங்கள் விரல்களை நனைத்து ஈர விரல்களால் உங்கள் முகத்தை வட்ட வடிவமாக மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு முகத்தை சுத்தம் செய்து விடுங்கள்.

இதை செய்த பிறகு உங்கள் முகத்தில் நல்ல ஒரு மாற்றம் தெரியும். முகம் பிரகாசமாக மாறி விடும். நீங்கள் பார்லர் சென்று வந்தால் கூட இவ்வளவு பளிச்சென்று உங்கள் முகம் மாறி இருக்காது. அதை விட எளிமையாக நல்ல எஃபெக்ட்டான பேக்காக இது இருக்கும். முகத்தை அழகாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு பார்லர் தான் செல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை.

இதையும் படிக்கலாமே: அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால் போதும். வெறும் அழகு இல்லைங்க. பேரழகை 10 நிமிடத்தில் பெறலாம். இந்த ரகசிய டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிந்தால்.

இது போன்ற எளிமையான வழிமுறைகளின் மூலம் மூலமாக நன்மை மேலும் அழகுப்படுத்திக் கொள்ளலாம் இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ள குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

சற்று முன்