ஆயிரக்கணக்கில் காசு செலவு செய்யாமல் 2 கேரட்டை வைத்து வீட்டிலேயே கோல்டன் பேஷியல் செய்து கொள்வது எப்படி? சொன்னா நம்ப மாட்டீங்க. நீங்க தங்கம் போல அப்படியே தகதகன்னு மின்னுவீங்க.

face9
- Advertisement -

கோல்டன் பேஷியல் என்றாலே பியூட்டி பார்லருக்கு சென்றால் ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் 2 கேரட்டை வைத்து நம்ம வீட்ல கோல்டன் பேஸியல் சுலபமாக செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பார்லருக்கு சென்று செய்யக்கூடிய பேசியலின் ரிசல்ட் இதில் கிடைக்குமா, என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா. ஒரே ஒரு முறை இந்த பேசியல் ட்ரை பண்ணுங்க. உங்க முகத்தை கண்ணாடியில் போய் பாருங்க. ரிசல்ட் அங்க தெரியும்.

முதலில் ஒரு கேரட்டை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாறை பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த கேரக்ட் ஜூஸை வைத்து தான் கோல்டன் பேஸியல் செய்யப்போகிறோம்.

- Advertisement -

க்ளென்சிங்:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் தயிர், 1 டேபிள்ஸ்பூன் கேரட் சாறு இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து இதை முகம் முழுவதும் தடவி 5 நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி முகத்தை துடைத்து விடுங்கள்.

ஸ்டீமிங்:
தமிழில் இதை ஆவி பிடிப்பது என்று சொல்லுவார்கள். ஒரு சிறிய பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து அந்த ஆவியை ஐந்து நிமிடங்கள் முகத்தில் பிடிக்கவேண்டும். முகம் வியர்வை வரும்வரை பிடித்துக்கொள்ளுங்கள். முகத்தில் இருக்கும் துவாரங்கள் திறக்க ஆரம்பிக்கும். அப்போதுதான் முகத்தில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் சுலபமாக நீக்க முடியும்.

- Advertisement -

ஸ்க்ரப்பிங்:
ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு கேரட் சாறு ஊற்றி இதை ஒரு க்ரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும். இந்த கிரீமை முகம் முழுவதும் அப்ளை செய்து இரண்டு கைகளை வைத்து வட்ட வடிவில் நன்றாக மசாஜ் செய்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி விடும். குறிப்பாக நெற்றிப் பகுதிக்கு, மூக்கு இடுக்குகளில் நன்றாக ஸ்கரப் செய்து முகத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். (ஸ்க்ரப் செய்ய தொடங்குவதற்கு முன்பு, உங்களுடைய முகத்தில் தண்ணீரால் நினைத்துக் கொள்ள வேண்டும். ட்ரையாக இருக்கும் முகத்தில் ஸ்கரப் செய்ய கூடாது.)

பேஸ் மசாஜ்:
ஒரு கேரட்டை குக்கரில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைத்து கொள்ளவும். வெந்த பிறகு அந்த கேரட்டை தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் ஊற்றி விழுது போல் அரைத்து கொள்ளவேண்டும். இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். இதோடு 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து இந்த கேரட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள். 5 லிருந்து 7 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு ஃபேஸ் பேக்கை அப்படியே விட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இப்போது உங்களுடைய முகம் லேசாக ஆரஞ்சு நிறத்திற்கு மாறி இருக்கும் செக் பண்ணிக்கோங்க.

ஃபேஸ் பேக்:
ஒரு சிறிய கிண்ணத்தில் ஆரஞ்சு பீல் பவுடர் 2 டேபிள் ஸ்பூன், எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கேரட் சாறு ஊற்றி நன்றாக கலந்து இந்த கிரீமை முகம் முழுவதும் கீழிருந்து மேல் பக்கமாக அப்ளை செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். அவ்வளவு தான். கோல்டன் பேஸியல் முடிந்துவிட்டது. நிச்சயமாக உங்களுடைய முகத்தின் நிறத்தில் மாற்றம் தெரியும். (முடிந்தால் ஆரஞ்சு பழ தோலை உங்கள் வீட்டிலேயே உலர வைத்து பொடி செய்து அந்த ஆரஞ்சு பவுடரை மாஸ்க் போட பயன்படுத்திக் கொள்ளலாம். முடியாதவர்கள் ஆரஞ்சு பில் பவுடரை கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.)

15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கோல்டன் பேஷியல் வீட்டில் இருந்தபடியே நாம் செய்து வரலாம். 3 லிருந்து 6 மாதத்திற்குள் உங்களுடைய முகம் நிரந்தரமாக தங்க நிறத்திற்கு மாறிவிடும். மேலே சொன்ன ஒவ்வொரு ஸ்டெப்ஸ் முடிந்தவுடன் வெறும் தண்ணீரில் மட்டும் தான் முகம் கழுவ வேண்டுமே தவிர, பேஸியல் செய்யும் போது சோப்பு போட்டு முகத்தை கழுவ கூடாது. பேஸியல் செய்து முடித்துவிட்டு 3 லிருந்து 4 மணி நேரம் முகத்தில் சோப்பு பயன்படுத்த வேண்டாம். இந்த டிப்ஸ் பிடித்திருந்தால், இன்ட்ரஸ்ட் இருந்தா மட்டும் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -