இந்த சட்னியை எதைக்கொண்டு அரைத்தீர்கள் என்று ஆராய்ச்சி செய்தாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆரோக்கியம் நிறைந்த இந்த சட்னி ரெசிபி உங்களுக்கும் வேணுமா?

carrot-chutney_tamil
- Advertisement -

தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது சூப்பரான கேரட் சட்னி. கேரட்டில் சட்னியா? பயந்துடாதீங்க. சுவை நல்லாதான் இருக்கும். இந்த சட்னியில் கேரட் சேர்த்து தான் அரைத்து இருக்கிறீர்கள் என்று அடித்து சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு இனிப்பு சுவை தெரியாமல் சுவையாக தான் செய்யப் போகின்றோம். கேரட்டை தொடாத குழந்தைகளுக்கு இந்த சட்னியை அரைத்துக் கொடுத்து விடுங்கள். அவர்கள் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு கொள்வார்கள். கேரட்டில் இருக்கும் சத்து குழந்தைகளின் உடலை போய் சேரும். வாங்க சுலபமான ஆரோக்கியம் தரும் சுலபமான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் 2 மீடியம் சைஸ் கேரட்டை எடுத்து தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் – எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும். அடுத்து பூண்டு – 3 பல், தோல் சீவியை இஞ்சி – 1 இன்ச், வரமிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 சேர்த்து, வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கி லேசாக நிறம் மாறி வந்தவுடன், நறுக்கிய தக்காளி பழம் – 1 சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி பழம் பாதி அளவு வெந்து வந்தவுடன், வெட்டி வைத்திருக்கும் கேரட்டை போட்டு, கேரட்டுக்கு தேவையான அளவு உப்பு தூள் தூவி, நன்றாக கலந்து விட்டு அடுப்பை முழுமையாக சிம்மில் வைத்து விட்டு, ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். கேரட் 90% நன்றாக வெந்து வரும்.

அந்த சமயம் புதினா – 1/2 கைப்பிடி அளவு, மல்லித்தழை – 1/2 கைப்பிடி அளவு, கோலிகுண்டு அளவு – புளி, போட்டு ஒருமுறை வதக்கி இறுதியாக 1 கைப்பிடி – தேங்காய் துருவல் போட்டு, ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைக்காதீர்கள்.

- Advertisement -

இதை துவையல் போல அரைத்து வழக்கம் போல, எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய், தாளித்து போட்டு அப்படியே சுட சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவை என்றால் இந்த சட்னியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆரோக்கியம் தரும் சிம்பிள் ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருக்கா மிஸ் பண்ணாம நாளைக்கு ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: பிரட் அல்வாவை ஒரு முறை இப்படி செய்து குடுத்து பாருங்க, திரும்ப திரும்ப இதையே செய்ய சொல்லி கேப்பாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

பின்குறிப்பு: இந்த சட்னிக்கு வெறும் வர மிளகாய் வைத்து அரைக்கலாம். வெறும் பச்சை மிளகாய் வைத்தும் அரைக்கலாம். கேரட்டை ரொம்ப அதிகமாக சேர்த்துவிட்டால், லேசாக இனிப்பு சுவை தெரியும். கேரட்டின் அளவை ஜாக்கிரதையாக பார்த்து வையுங்கள். அதேசமயம் கேரட் வதக்கும் போது நன்றாக வேக வில்லை என்றாலும், சட்னியில் பச்சை கேரட் வாசனை வீசும். சட்னி சரியாக அரைபட்டு கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -