தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

munthiri

மனித உடல் என்பது மிகவும் அதிசயமான ஒரு இயற்கையின் படைப்பாகும். இந்த மனித உடலை நீண்ட காலம் நோய் நொடியின்றி பாதுகாத்து கொள்ள சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

cashew

முந்திரி பருப்பு நன்மைகள்

இதயம்
பலரும் கொழுப்புக்கள் நிறைந்துள்ள உணவை முற்றிலும் தவிர்ப்பது இதயத்திற்கு நல்லது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. நமது உடலுக்கு கொழுப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய நல்ல கொழுப்புக்கள் முந்திரி பருப்பில் அதிகம் நிறைந்துள்ளதால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இதயத்தை பாதுகாக்க முடியும்.

செரிமானமின்மை

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை ஏற்படுகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை முந்திரி பருப்புஅற்புதமாக குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் தீரவும், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீரவும் முந்திரி பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் தீரும்.

cashew

- Advertisement -

வலிமையான எலும்புகள்

கால்சியம், மக்னீசியம் ஆகிய இரண்டு தாதுகளும் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் தேவையானதாக இருக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவையிரண்டும் அவசியம். ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 300-750 கிராம் மக்னீசியம் அவசியம். ஏனெனில் மக்னீசியம் தான் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிகிறது. முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதால் மேற்கண்ட பலன்களை பெறலாம்.

புற்றுநோய்

மனிதர்களை பாதிக்கும் கொடிய நோய்களில் புற்று நோய் ஒன்று. முந்திரி பருப்பில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுத்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

cashew

தலைமுடி

நாற்பது வயதுகளை தொடும் போதே அனைவருக்கும் தலைமுடி நரைக்கிறது. முந்திரி பருப்பில் காப்பர் எனும் செம்பு தாதுப்பொருள் உள்ளது. இது முடியின் கருமை நிறத்தைப் பாதுகாத்து.முடி விரைவில் நரைக்காமல் தடுக்கிறது. தலைமுடி ஆரோக்கியம் காக்க முந்திரி பருப்புகளை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

இரத்த அழுத்தம்

இன்று பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனையாக ரத்த அழுத்தம் பிரச்சனை இருக்கிறது. முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது து. எனவே உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க முந்திரி பருப்புகளை தினமும் சிறிது உட்கொண்டு வருவது நன்மை தரும்.

cashew

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் நிலை ஏற்படுகிறது. தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவதைத் சுலபத்தில் தடுக்கலாம்.

எடை குறைவு

முந்திரி பருப்பிற்கு எடை கூடவும், குறைக்கவும் செய்யும் சக்தி உண்டு. மேலும் தினமும் சிறிது முந்திரியை உட்கொண்டு வந்தவர்களை, முந்திரி சாப்பிடாமல் இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் உடல் எடை அதிகரிப்பது குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

cashew

நிம்மதியான தூக்கம்

தினமும் சிறிது முந்திரி சாப்பிட்டு வந்தால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சரியாக தூக்கமின்றி தவிப்பார்கள். இக்காலகட்டத்தில் முந்திரி பருப்பை உட்கொண்டு வந்தால், இறுதி மாதவிடாய்க்கு பின் பெண்கள் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

நரம்புகள்

நமது உடலில் மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் மிகவும் அவசியம். முந்திரி பருப்பில் இவை இரண்டும் அதிகம் உள்ளன. மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்களையும், தசைகளையும் ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. எனவே அடிக்கடி முந்திரி சாப்பிடுவது நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே:
10 முக ருத்ராட்சம் பலன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Cashew nut benefits in Tamil. It is also called as Munthiri paruppu in Tamil or Munthiri payangal in Tamil or Munthiri paruppu maruthuvam in Tamil.