அபூர்வமான 10 முக ருத்ராட்சத்தின் அற்புத பலன்கள் இதோ

சைவர்கள் சிவ பெருமானை வழிபாடு செய்யும் காலங்களில் தங்களின் உடலில் சிவ சக்தி கொண்ட ருத்ராட்சம் அணிவது அவசியம் என்று சைவ சம்பிரதாய விதிகள் கூறுகின்றன. ருத்ராட்சங்கள் பல வகைகளில் இருக்கின்றன. அவற்றில் ஊன்று தான் அபூர்வ வகையான 10 முக ருத்ராட்சம். இந்த 10 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

10 முக ருத்ராட்சம் பலன்கள்

இதய பாதிப்புகள்

பதட்டமான விடயங்களை பார்க்கும் போதும், கேட்கும் போதும் இதயத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது இயல்பானது தான். ஆனால் இதயம் சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள், பிறவியிலேயே பலவீனமான இதயம் கொண்டவர்கள் எதற்கு பதட்டப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் 10 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இதய படபடப்பு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது.

முதுகு வலி

நமது உடலை சரியாக இயங்க செய்வதில் முதுகு முக்கிய பங்கு வகிக்கிறது. முதுகு தண்டுகளில் தான் அனைத்து நரம்புகளும் செல்கின்றன. முதுகு வலி பிரச்சனை உள்ளவர்கள், பக்க வாத பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் 10 முக ருத்ராட்சம் அணிவதால் சிறந்த பலன்களை பெற முடியும்.

- Advertisement -

கடன், பொருள் நஷ்டம்

பணம் சம்பாதிப்பதற்கு திறமை இருக்க வேண்டியது அவசியம் அதை விட சம்பாதித்த பணத்தை முறையாக சேமித்து வைப்பதற்கும் தனி திறன் வேண்டும். தற்காலத்தில் அனைத்து தரப்பு மனிதர்களையும் இந்த கடன் பிரச்சனை பிடித்து வாட்டுகிறது. தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கும் பொருள் நஷ்டம் உண்டாகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் 10 முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு நீங்குகிறது.

குழந்தை பேறின்மை

திருமண வாழ்வு முழுமை பெறுவதே, திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு ஏற்படுவதால் தான். உலகம் முழுவதுமே குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்த குழந்தையின்மை பிரச்சனை தீர 10 முக ருத்ராட்சம் அணிந்து கொள்ள வெகு சீக்கிரத்திலேயே அதை அணிந்திருப்பவர்களுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

கிருஷ்ண பகவான்

10 முக ருத்ராட்சம் பரந்தாமனின் 9 ஆவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அம்சம் கொண்டதாகும். இதை அணிபவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் எப்போதும் இருக்கும். மேலும் எல்லா திசைகளிலும் இருந்து எத்தகைய துன்பங்கள், ஆபத்துகளிலிலிருந்தும் காக்கும் தன்மை கொண்டதாக 10 முக ருத்ராட்சம் இருக்கிறது.

மன நோய்கள்

8 முக ருத்ராட்சம் பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு வஸ்துவாக இருக்கிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறைகளால் பலருக்கும் மன அழுத்தங்கள் ஏற்பட்டு மன தளர்ச்சி, மன நிலை பாதிப்பு, ஞாபக மறதி போன்றவை ஏற்படுகிறன. 8 முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு அவர்களின் உடல் மற்றும் மன நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட்டு ஞாபக மறதி, மன நோய்கள் போன்றவை அனைத்தும் முழுமையாக குணமாகும்.

ஆண்மை குறைபாடுகள்

உடலில் நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுவதாலும், மன ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுவதாலும் பல ஆண்களுக்கு ஆண்மை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுகிறது. இது மலட்டுத்தன்மை மற்றும் இதர உடற்குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. இப்படிப்பட்டவர்கள் 10 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.

துஷ்ட சக்திகள்

நாம் உலகில் நம் கண்களால் காண முடிகிற தீமைகளில் இருந்து நம்மை காத்து கொள்கிறோம் ஆனால் கண்ணனுக்கு தெரியாத பல தீமைகள் இந்த உலகில் இருக்கின்றன. அத்தகைய சக்திகளை தீய மாந்திரீக கலை மூலம் நமது எதிரிகள் பிரயோகிக்கின்றனர். இத்தகைய மாந்திரீக தாக்குதல்கள், துஷ்ட சக்திகள் பாதிப்புகள் போன்றவை 10 முக ருட்ராட்சம் அணிந்திருப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை.

சொத்து பிரச்சனைகள்

நமது முன்னோர்கள் கடினமாக உழைத்து பொருளீட்டி நமக்காக பல சொத்துகளை சேர்த்து வைக்கின்றனர். அவர்கள் மறைந்த பின்பு அவர்களின் வாரிசைகளுக்கிடையே இந்த சொத்துகளை சுமூகமாக பிரிப்பதில் பிரச்சனை உண்டாகிறது. இத்தகைய சொத்து சம்பந்தமான பிரச்சனை தீர்ந்து உங்களுக்கு வர வேண்டிய பாகங்கள் சரியாக கிடைக்க 10 முக ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள்.

நீதிமன்ற வழக்குகள்

தற்காலங்களில் பேசி தீர்த்துக்கொள்ள கூடிய விடயங்களுக்கு கூட நீதி மன்றங்களில் வழக்கு தொடுக்கும் நிலை இருக்கிறது. இப்படி நீதி மன்ற வழக்குகளில் எந்த ஒரு தவறும் செய்யாமல் சிக்குபவர்களும், நீண்ட கால வழக்கு சீக்கிரம் முடிய விரும்புபவர்களும் 10 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் சீக்கிரத்தில் வழக்குகளில் சாதகமான முடிவுகளை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
9 முக ருத்ராட்சம் பலன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 10 mukhi rudraksha benefits in Tamil. It is also called as 10 mukhi ruthratcham in Tamil or Rudraksha mukhi benefits in Tamil or Ruthratcham palanal in Tamil.