30 நாட்களில் முடி உதிர்வு நிற்க வேண்டுமா? விளக்கெண்ணெயை தலையில் இப்படி வைத்தால் 100 முடிகள் கொட்டும் இடத்தில், வெறும் 10 முடிகள் தான் உதிரும்.

hair6
- Advertisement -

முடி உதிர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. குறிப்பாக இந்த வெயில் காலத்தில் முடி வளர்ச்சியும் இருக்கும். அதே சமயம் முடி உதிர்வும் இருக்கும். இரண்டையும் சரிசமமாக பேலன்ஸ் செய்ய ஒரு சூப்பரான குறிப்பு உங்களுக்காக. இரண்டு மெத்தடில் இந்த குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு குறிப்பிலுமே நாம் பயன்படுத்த போகும் பொருள் 2 பொருள் தான். ஆனால் பயன்படுத்தும் விதம் தான் வேறு வேறு. நேரத்தைக் கடத்தாமல் முடி உதிர்வை முப்பதே நாட்களில் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

இந்த குறிப்புக்காக நாம் பயன்படுத்த போகும் பொருள் இரண்டு பொருட்கள். வெந்தயம், விளக்கெண்ணை அவ்வளவு தான். உங்களுடைய உடம்பு ரொம்பவும் சூட்டு உடம்பாக இருந்தால் இந்த மெத்தடை நீங்க ட்ரை பண்ணலாம். ஒரு அகலமான பவுலில் முந்தைய நாள் இரவே 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை போட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் காலை அந்த வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டு விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வெந்தய விழுதோடு 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து இதை அப்படியே உங்களுடைய தலையில் பேக் போட்டு கொள்ள வேண்டும். பேக் போடுவதற்கு முன் தலையில் நன்றாக தேங்காய் எண்ணெயை வைத்து சிக்கு எடுத்து மசாஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பேக் 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை உங்களுடைய தலையில் இருக்கலாம். அதன் பின்பு ஷாம்பு போட்டு உங்களுடைய தலையை சுத்தம் செய்து அலசி விடுங்கள். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்தலாம். இது ஒரு மெத்தட் இருக்கட்டும்.

இரண்டாவதாக ரொம்பவும் குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள், சீக்கிரமே சளிக்காய்ச்சல் வரக்கூடியவர்கள் என்ன செய்வது. ஒரு சிறிய பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த வெந்தய தண்ணீரோடு 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். எண்ணெயும் தண்ணியும் ஒன்றாக கலக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.

- Advertisement -

இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்றாகக் குலுக்கி விட்டு அதன் பின்பு உங்களுடைய தலையில் ஸ்கால்ப்பில் முன்பக்கம் பின்பக்கம் இருக்கக்கூடிய வேர் கால் பகுதியில் நன்றாக ஸ்ப்ரே செய்து விட்டு 15 லிருந்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து விட வேண்டும். இப்படி செய்தால் குளிர்ச்சி தன்மை கொஞ்சம் குறைவாக இருக்கும்.

உங்களுக்கு எந்த டிப்ஸ் பிடிச்சு இருக்கோ அதை ட்ரை பண்ணி பாருங்க. 30 நாட்களில், வாரத்தில் மூன்று நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வருபவர்களுக்கு நிச்சயம் 100 முடி கொட்டும் இடத்தில் 10 மோடி மட்டும் தான் கொட்டும் என்பது குறிப்பிடதக்கது. ஒரு முடி உதிராமல் நிச்சயம் இருக்காது. கொஞ்சமாக தலையிலிருந்து முடி உதிர்வது என்பது இயற்கைதான். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -