இந்த 2 எண்ணெயையும் கலந்து தலையில் தேய்த்து வந்தாலே போதும். முடி அடர்த்தியாக தாறுமாறாக வளர தொடங்கிவிடும்.

hair
- Advertisement -

இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்த முடி உதிர்வு பிரச்சினை அதிக அளவில் காணப்படுகின்றது. சிறு வயதிலேயே தலையில் வழுக்கை. ஒரு ரப்பர் பேண்ட் கூட போட முடியாத அளவுக்கு முடி மெல்லிசாக காணப்படுகிறது. முடி உதிர்வு பிரச்சினைக்கு ஒரு தீர்வு கட்ட மிக மிக சுலபமான முறையில், ஒரு ஆயில் மசாஜை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு அதிகப்படியான செலவும் இருக்காது. நிறைய நேரத்தை ஒதுக்கி கஷ்டப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. இரண்டு எண்ணெய் வாங்க போறீங்க. ஒன்றாக கலக்க போறீங்க. தலையில ஹேர் மசாஜ் செய்யப் போறீங்க. அவ்வளவு தான்.

vilakkenai

எல்லார் வீட்டு பக்கத்துல சின்ன சின்ன அண்ணாச்சி கடையில கூட கிடைக்கிற பொருள் தான் விளக்கெண்ணெய். ஆனால் பெரும்பாலும் நம்முடைய தலைமுடிக்கு விதவிதமாக கெமிக்கல் கலந்த எத்தனையோ எண்ணெயை வாங்கி தடவுகின்றோம். ஆனால் யாருமே இந்த விளக்கெண்ணையை நம்புவது கிடையாது. விளக்கெண்ணெயில் முடி வளர்ச்சியை அதிகப்படுத்த கூடிய Omega-6 fatty acid அதிகமாக உள்ளது. முடி வளர்ச்சிக்கு இந்த விளக்கெண்ணையை பயன்படுத்தினாலே போதும்.  முடியின் அடர்த்தி சீக்கிரத்தில் அதிகரிக்க தொடங்கிவிடும்.

- Advertisement -

அதாவது உங்களுடைய ஒரே ஒரு முடியை கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முடியின் இரண்டு முனையையும் உங்களுடைய விரல்களால் சுத்தி கொண்டு லேசாக இழுத்தால் அப்படியே உடைந்துவிடும். சில பேருடைய முடி ரப்பர் போல இருக்கும். அவ்வளவு சீக்கிரத்தில் உடையாது. இப்படி நம்முடைய தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் அடர்த்தியாக உடையாமல் இருந்தால் முடி உதிர்வு கட்டுப்பாட்டில் வந்துவிடும். அதேசமயம் மண்டை ஓட்டில் முடி நெருக்கமாகவும் இருக்கும்‌. தலையில் வழுக்கை தெரியாமலும் இருக்கும். சரி இந்த முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்க விளக்கெண்ணெயை நாம் எப்படி பயன்படுத்தலாம்.

oil

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் மசாஜை கட்டாயம் நாம் செய்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இந்த இரண்டு எண்ணெயும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இந்த எண்ணெயை உங்கள் விரல்களால் தொட்டோ அல்லது காட்டன் பஞ்சில் தொட்டு தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு முடியின் அடிபாகம் வரை இந்த எண்ணெயை தேய்த்து அப்படியே 20 நிமிடங்கள் போல ஊற வைத்துவிட்டு தலைக்கு குளித்து விட வேண்டும். ஹெர்பல் ஷாம்பூ, அல்லது கலப்படமில்லாத சீயக்காய் போட்டு தலைக்கு குளிக்கலாம்.

- Advertisement -

நீங்கள் பயன்படுத்தும் எந்த ஷாம்பு வாக இருந்தாலும் சரி, எந்த சீயக்காய் ஆக இருந்தாலும் சரி அதை நேரடியாக அப்படியே தலையில் போடக்கூடாது. ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, அந்தத் தண்ணீரில் சீயக்காய் அல்லது ஷாம்பூவை கலந்து, அதை எடுத்து தலையில் அப்ளை செய்து குளிப்பது தான் சரியான முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

hair

அடிக்கடி சளி பிடிக்கும் அடிக்கடி தலைவலி வரும் என்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் மசாஜ் செய்து கொள்ளலாம். விளக்கெண்ணெய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய ஒரு பொருள். இது மழைக்காலம் என்பதால் உங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த விளக்கெண்ணெய் ஒத்துக் கொள்ளுமா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். சூடான உடல் என்றால் தாராளமாக வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். ட்ரை பண்ணி பாருங்க ஒரே மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -