இந்த 1 பொருளை சேர்த்து காலிஃப்ளவர் சில்லி செஞ்சு பாருங்களேன்! எவ்வளவு நேரம் ஆனாலும் மொறுமொறுப்பாகவே இருக்கும். கடையில் வாங்கிய சில்லி கூட இவ்வளவு நேரம் மொறுமொறுப்பாக இருக்காது.

coliflower65
- Advertisement -

மொறு மொறு காலிபிளவர் சில்லி யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் நிறைய பேருக்கு ஃபேவரட் ஸ்னாக்ஸ் இந்த காலிபிளவர் சில்லி. ஆனால் வீட்டில் செய்தால் மொறுமொறுப்பாக, கடையில் வாங்கியது போல் கிடைக்காது. அப்படியே மொறுமொறுப்பாக பொரித்து எடுத்தாலும் ஓரிரு நிமிடங்களில் அது நமுத்து போய்விடும். நீண்ட நேரம் காலிபிளவர் சில்லி மொறு மொறுப்பாக இருக்க எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்த பக்குவத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ரெசிபி இதோ இந்த பதிவில் உங்களுக்காக. நீங்க காலிபிளவர் சில்லி பிரியர்களாக இருந்தால், இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க.

காலிஃப்ளவர் சில்லி என்றால் பெரும்பாலும் அரிசி மாவு, கடலை மாவு, அப்படி இல்லை என்றால் கடையில் ரெடிமேட் ஆக கிடைக்கும் ஈசில்லி பவுடர் போட்டு தான் செய்வோம் அல்லவா. இன்னைக்கு நாம பார்க்க போற ரெசிபியில் மைதா மாவு, சேர்த்து காலிஃப்ளவர் சில்லி செய்ய போகின்றோம். இந்த பக்குவத்தில், பின் சொல்ல கூடிய குறிப்புகளை பின்பற்றி காலிஃப்ளவர் சில்லி செய்தால் நிச்சயம் ரெசிபி சொதப்பாது.

- Advertisement -

செய்முறை

500 கிராம் அளவு காலிபிளவரை எடுத்துக் கொள்ளுங்கள். சில்லி செய்யும் போது காலிஃப்ளவர் ரொம்பவும் பொடிசாக இருக்கக் கூடாது. ஓரளவுக்கு பெரிய பெரிய துண்டுகளாக கீழே சின்ன சின்ன காம்புகளோடு, சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் காலிபிளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு, கொஞ்சமாக உப்பு மஞ்சள் தூள் போட்டு, இந்த காலிபிளவரை, கொட்டி கொதிக்கின்ற தண்ணீரில் 2 நிமிடம் வைத்து உடனடியாக எடுத்து விட வேண்டும். கொதிக்கின்ற தண்ணீரில் காலிபிளவர் ரொம்பவும் வெந்து விட்டாலும் சில்லி மொறு மொறுப்பாக வராது.

தண்ணீரை எல்லாம் வடிகட்டி ஒரு அகலமான பவுலில் காலிபிளவரை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த காலிபிளவரோடு மைதா – 1/2 கப்(50கிராம்), கான்பிளவர் மாவு – 1/2 கப்(50கிராம்), சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதோடு இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், சிவப்பு நிற ஃபுட் கலர் – 2 சிட்டிகை, சேர்த்து முதலில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் உங்கள் கையை கொண்டு காலிஃப்ளவர் உடையாமல் நன்றாக பிசைந்து விட வேண்டும். நாம் சேர்த்த மசாலா பொருட்கள் எல்லாம் எல்லா இடங்களிலும் படும்படி கலந்து விடுங்கள்.

பிறகு 1/4 கப் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, காலிபிளவரை மசாலாவோடு கலந்து தர வேண்டும். ரொம்பவும் கோட்டிங் தண்ணியாக கூடாது. அதே சமயம் ரொம்பவும் உதிரி உதிரியாகவும் கூடாது. கான்பிளவர் மாவு மைதா மாவும், மசாலாவும் அந்த காலிபிளவர் மேலே கோட்டிங் ஆகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். அவ்வளவு தான்.

- Advertisement -

நமக்கு தேவையான மாவு ரெடி. உங்களுக்கு ஃபுட் கலர் சேர்க்க விருப்பம் இல்லை என்றால், காஷ்மீரி மிளகாய் தூள் கூட சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். கலர் இல்லாமலும் செய்யலாம். இருந்தாலும் பார்ப்பதற்கு கடையில் வாங்கிய சில்லி போல இருக்காது.

சரி, இப்போது மசாலா கோட்டிங் செய்த காலிபிளவரை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து அடுப்பை மிதமாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு தயாராக இருக்கும் சில்லியை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுக்க வேண்டும். போட்டவுடன் சிடசிடப்பு அதிகமாக இருக்கும் அல்லவா. அந்த சடசிடப்பு அடங்கும் வரை காத்திருந்து எண்ணெயிலிருந்து எடுத்து விடுங்கள். எல்லா சில்லியையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொறித்து எடுத்துவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 5 நிமிஷத்துல ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல சூப்பரான வெஜிடபிள் சூப் வீட்டிலேயே தயார் பண்ணிடலாம். டேஸ்ட் சும்மா அட்டகாசமா அப்படியே ரெஸ்டாரன்ட்ல போய் சூப் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். வாங்க ட்ரை பண்ணலாம்.

சூடாக இருக்கும் அந்த எண்ணெயிலேயே கொஞ்சமாக கருவேப்பிலை போட்டு பொரித்து எடுத்து அதை இந்த சில்லியின் மேலே தூவி நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை பழத்தோடு பரிமாறினால் கடையில் வாங்கிய சில்லியின் சுவை தோற்றது. அதே சமயம் இப்படி காலிஃப்ளவர் சில்லி செய்தால், நீண்ட நேரத்திற்கு மொறுமொறுப்பாகவே இருக்கும். நன்றாக ஆற வைத்து டப்பாவில் போட்டு, குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுக்கலாம். உங்களுக்கு இந்த சில்லி ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -