உங்க வீட்ல இன்னைக்கு ஈவினிங், இந்த காலிஃப்ளவர் மசாலா செஞ்சி பாருங்க! அப்புறமா வீட்ல இருக்கிறவங்க, உங்கள பாராட்டிடே இருப்பாங்க. அவ்ளோ சூப்பரா இருக்கும். அவ்வளவு சிம்பிளா செஞ்சு முடிச்சிடலாம்.

chilli1

இப்ப கடைகளில் காலிபிளவர் கிடைக்கிறது. காலிஃப்ளவர் என்றாலே குழந்தைகளுக்கும், வீட்டில் இருப்பவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த காலிபிளவரை வைத்து கொஞ்சம் வித்தியாசமான முறையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே காலிஃப்ளவர் சில்லி மசாலா எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரொம்ப ரொம்ப ஈஸியா இத செஞ்சு முடிச்சிடலாம். உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க. அப்புறம் என்ன ஆகும்? பாராட்டு மழைதான். சரி சரி குறிப்புக்கு செல்லலாம்.

coliflower

முதலில் 250 கிராம் அளவு காலிஃபிளவர் நமக்கு தேவைப்படும். காலிபிளவரை அந்த கொத்தில் இருந்து சிறிய துண்டுகளாக வெட்டி, உப்பு கலந்த சுடுதண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் ஊற வைத்து, நல்ல தண்ணீரில் போட்டு கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுடு தண்ணீரில் இந்த காலிஃப்ளவர் அதிக நேரம் கூறக்கூடாது.

அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா – 1/4 கப், கான்ஃபிளவர் மாவு – 4 ஸ்பூன், அரிசி மாவு – 1 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகு தூள் – 2 சிட்டிகை, தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் மைதா மாவுக்குப் பதிலாக ரவையை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கூட சேர்த்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

chilli3

கெட்டிப் பதத்தில் தயாராக இருக்கும் இந்த கலவையில் தயாராக இருக்கும் காலிஃப்ளவரை போட்டு, நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். நீங்கள் தயார் செய்திருக்கும் பேஸ்ட், காலிஃபிளவர் முழுவதும் நன்றாக ஒட்டிக் கொள்ளும். அதன் பின்பு கடாயில் எண்ணெயை நன்றாக காயவைத்து, காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

காலிஃப்ளவர் உள்ளே வேக வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக காலிஃப்ளவரை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே சாப்பிடுவதற்கு மொறுமோறு வென்று சுவையாக இருக்கும். இந்த சில்லி அப்படியே ஓரமாக இருக்கட்டும்.

chilli2

அடுத்தபடியாக, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, போட்டு தாளித்து ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் இருக்கும் இடமே தெரியக்கூடாது.

chilli4

இறுதியாக வெங்காயத்திற்கு தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன் போட்டு இந்த மசாலாவின் பச்சை வாடை போனதும், பின்பு தயாராக பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவர் சில்லியை கடாயில் கொட்டி, நன்றாக கிளறி விடவேண்டும்.(வெங்காயம் வதக்கும்போது தண்ணீர் எதுவும் ஊற்றி விடக்கூடாது. அந்த எண்ணெயிலேயே தான் ட்ரை ஃப்ரை ஆகவேண்டும்.)

chilli5

வெங்காய மசாலாவும் காலிஃப்ளவர் சில்லியும் நன்றாக கலந்த பின்பு, ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு மேலே தேவைப்பட்டால் பச்சை வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி, பக்கத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு இந்த ஸ்டைல்ல ஒரு வாட்டி செஞ்சு கொடுத்து பாருங்க! அப்புறம் சொல்லுங்க இது எப்படி இருந்துச்சுன்னு.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு டீ ஃபில்டர் எப்பவுமே அழுக்காதா இருக்குமா? ஒருவாட்டி 5 நிமிஷம் நேரத்தை ஒதுக்கி இப்படி க்ளீன் பண்ணிதா பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.