காலிஃப்ளவர் குருமாவை ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க! காலிஃப்ளவரின் பச்சை வாடை வராமல், சூப்பர் குருமா வைக்க சின்ன சின்ன டிரிக்ஸ்.

cauliflower-kuruma
- Advertisement -

நிறைய பேருக்கு காலிஃப்ளவர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், இந்த குருமாவை வைக்கும் போது லேசாக பசுறு வாசனை என்று சொல்லப்படும் பச்சை வாடை வரும். சிலருக்கு பக்குவமாக இந்த குருமாவை வைக்கத் தெரியாது. உடலுக்கு அதிகப்படியான நார்ச்சத்து கொடுக்கும், இந்த காலிஃப்ளவரை வைத்து சுவையான, சூப்பர் குருமாவை, எப்படி சுலபமாக வைப்பது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுவோம். கூடவே இந்த குருமாவில், நாம் சேர்க்கபோகும் ஒரு பொருள், குருமாவுக்கு அதிகப்படியான சுவையை கொடுக்கப் போகிறது. அது எந்த பொருள் என்பதையும் தெரிந்து கொள்ளலாமா?

cauliflower

Step 1:
முதலில் ஒரு 1கப் அளவு தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு, 10 முந்திரி பருப்பு, 1/2 ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் கசகசா சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது. பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். முந்திரிப்பருப்பு வேண்டாம் என்றால், அரை ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இஞ்சி பூண்டையும் மிக்ஸியில் போட்டு, அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். காலிஃப்ளவர் குருமாவிற்கு எப்போதுமே இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும்போது, இஞ்சியின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். பூண்டின் அளவு குறைவாக இருக்க வேண்டும். மூன்று பங்கு இஞ்சி என்றால், ஒரு பங்கு பூண்டு வைப்பது சரியான அளவு.

coconut-broken

Step 2:
காலிபிளவரை பூ, பூவாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கல் உப்பு போட்டு, கொதிக்கவிட்டு வெட்டி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு அலசி கழுவுவது தான் சரியான முறை.

- Advertisement -

Step 3:
ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். சோம்பு, பட்டை, லவங்கம், பிரியாணி இலை, பச்சை மிளகாய் ஒன்று, இவர்களை போட்டு முதலில் தாளிக்க வேண்டும். அடுத்தபடியாக பெரிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கி எண்ணெயில் போட்டு வதக்கவேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய உடன், பொடியாக நறுக்கிய தக்காளி பழம் 1, போட்டு வதக்க வேண்டும், தக்காளி போட்ட பின்பு இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன், அளவு சேர்க்கவேண்டும்.

onion-cutting

குருமா, உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்டோடு, 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து தொக்கு பதம் வரும் வரை வதக்கி விட வேண்டும். அதன் பின்பு குருமா வுக்கு தேவையான மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லி தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன், சீரகத்தூள் -1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், இவைகளை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி விட வேண்டும். (குழம்பு மிளகாய் தூள் இருந்தால், ஒரு ஸ்பூன் சேர்த்தால் குருமாவின் சுவை அதிகரிக்கும்.)

- Advertisement -

அதன் பின்பு வெட்டி சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவரோடு, இந்த இடத்தில் ஒரு சிறிய உருளைக்கிழங்கை ஓரளவிற்குப் பெரிய துண்டுகளாக வெட்டி, சேர்த்துக் கொள்ள வேண்டும். காலிஃப்ளவரோடு, ஒரு உருளைக்கிழங்கு சேர்ந்தால் அதன் மனமும் சுவையும் இன்னும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (நிறைய உருளைக்கிழங்கு சேர்க்க வேண்டாம். 100 கிராம் காலிபிளவர் எடுத்துக்கொண்டால், சிறிய அளவிலான ஒரு குட்டி உருளைக்கிழங்கு போதும்.)

potato-urulai

கடாயில் வதங்கிக்கொண்டிருக்கும் மசாலாவோடு, காலிஃப்ளவரையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு கொதி வரும் வரை விட வேண்டும். அதன் பின்பு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்றி, குருமாவிற்கு தேவையான அளவு தண்ணீரை சேர்த்து, உப்பு காரம் சரி பார்த்து, ஒரு மூடி போட்டு குருமாவை மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.

cauliflower1

காலிஃப்ளவர் குருமாவை பொறுத்தவரையில், தேங்காய் ஊற்றிய பின்பு, அந்த குருமா 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வேண்டும். அப்போதுதான் குருமாவில் சுவை அதிகரிக்கும். உங்களுக்கே தெரியும் நீங்கள் ஊற்றிய எண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வரும். அப்போது கொத்தமல்லி தழை தூவி, இருக்கிறீர்கள் என்றால், சூப்பர் குருமா தயார் ஆகிவிடும்.

cauliflower2

உருளைக்கிழங்கு சேர்த்து, இஞ்சி பூண்டு பேஸ்டில், இஞ்சியை தூக்கலாக சேர்த்து, குருமாவை நன்றாக கொதிக்க வைத்து, சாப்பிட்டு பாருங்கள்! நீங்கள் சாதாரணமாக வைக்கும் காலிஃப்ளவர் குருமா விற்கும், இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி வைக்கும் குருமா விற்கும், சுவையில் நிறையவே வித்தியாசம் தெரியும். சாப்பாடு, சப்பாத்தி, இட்லி, தோசை எல்லாவற்றிற்கும் இந்த குருமா சூப்பர் சைட் டிஷ் ஆக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த சாதாரண பூக்களுக்குள் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -