- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் 'காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை' நச்சுன்னு பெர்ஃபெக்டா எப்படி...

பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் ‘காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை’ நச்சுன்னு பெர்ஃபெக்டா எப்படி செய்யறது. தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

சில நேரங்களில் சைவம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். ஆனால், நமக்கு அந்த நேரத்தில் அசைவம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அசைவ பிரியர்களுக்கு காலிபிளவர் பெப்பர் ஃப்ரையை இப்படி செய்து கொடுத்து பாருங்கள். தயிர் சாதம், ரசம் சாதம், கில்லி போட்ட சாம்பாருக்கு தொட்டு கொண்டால், அசைவம் சாப்பிட்டது போலவே நிறைவு நமக்கு கிடைக்கும். சூப்பரான மசாலா பொருட்கள் நிறைந்த காலிபிளவர் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா.

coliflower-fry1

முதலில் காலிபிளவரை சுத்தம் செய்ய வேண்டும். காலிபிளவரை தனித்தனி பூக்களாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பில் அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக காயவைத்து, அதில் 1/2 ஸ்பூன் உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த சுடுதண்ணீரில் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு தண்ணீரை வடித்து காலிபிளவரை எடுத்து பயன்படுத்த வேண்டும். இந்த காலிபிளவர் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெயங காய்ந்ததும் சோம்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, இந்த பொருட்களை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

onion

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 3, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தனியா தூள் – 2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து இரண்டு நிமிடம் போல நன்றாக வதக்கவேண்டும். தக்காளிப்பழம் வெங்காயம் வதங்கி குழைந்து ஒரு தொக்கு பக்குவத்தில் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக கழுவி எடுத்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை கடையில் இருக்கும் கிரேவியில் சேர்த்து, இரண்டு நிமிடம் போல நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பின்பு காலிஃப்ளவர் வேக தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே வதக்கும் போது உப்பு சேர்த்து இருக்கின்றோம். இப்போது காலிபிளவருக்கு தேவையான அளவு மட்டுமே உப்பு போட்டுக் கொள்ளுங்கள். காலிஃப்ளவர் கொழகொழவென வெந்து விடக்கூடாது. அது நமக்கு சுவை தராது. பார்ப்பதற்கு காலிபிளவர் அப்படியே நெம்பாக 90 சதவிகிதம் வெந்து இருந்தால் போதும். (அதாவது காலிஃப்ளவரை வேக 6 லிருந்து 8 நிமிடங்கள் எடுக்கும் அவ்வளவுதான்.)

coliflower-fry2

காலிஃப்ளவர் சரியான பக்குவத்திற்கு வெந்து வரும்போது 2 டேபிள்ஸ்பூன் மைய அரைத்த தேங்காய் விழுதை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக 1 டேபிள்ஸ்பூன் மிளகுத் தூளை தூவி, 1/2 ஸ்பூன் சோம்பு தூள் தூவி, இந்த மசாலா கிரேவி காலிபிளவர் உடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி விடுங்கள். மிளகு தூள் சேர்த்த பின்பு ஒரு நிமிடத்திற்கு மேல் இந்த காலிஃப்ளவர் ஃப்ரையை அடுப்பில் வைத்து சமைக்கக் கூடாது. லேசாக கசப்பு தன்மை வந்துவிடும்.

coliflower-fry3

அவ்வளவு தாங்க. சுடச்சுட இந்த ரெசிபியை டேஸ்ட் பண்ணி பாருங்க. சுடச்சுட சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டாலும் அவ்வளவு ருசியாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. இந்த காலிபிளவர் பெப்பர் ஃப்ரை உங்களுக்கு காரம் குறைவாக தேவை என்றால் இதில் தேங்காய் பாலை கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான்.

சற்று முன்