தோனி என்னுடன் மொபைலில் இந்த விளையாட்டை விடிய விடிய விளையாடுவார். நானும் அவரும் இந்த விளையாட்டின் பைத்தியம் என்றே கூறலாம் – சாஹல்

Chahal

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

Dhoni

எனவே இந்த தொடர்தான் உலககோப்பைக்கு முன்னதான இந்திய அணியின் கடைசி ஒருநாள் தொடராகவும், இந்திய அணியின் பலத்தினை சோதிக்கும் ஒரு தொடராகவும் அமையும். இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான சாஹல் அவருக்கும் தோனிக்கும் இடையேயான உறவு குறித்து கூறினார்.

இதுகுறித்து சாஹல் கூறியதாவது : நானும் தோனியும் மொபைலில் பப்ஜி விளையாட்டினை தொடர்ந்து இரவுவேளைகளில் விளையாடுவோம். மேலும், 7 முதல் 8 இந்திய அணி வீரர்கள் இணைந்து இந்த விளையாட்டினை விளாயாடி உள்ளோம். தோனியுடன் பழகுவதற்கு மட்டுமல்ல விளையாடுவதற்கும் நன்றாக இருக்கும்.

chahal

பலவேளைகளில் நானும் தோனியும் ஒன்றாக இரவு உணவினை சாப்பிட செல்வோம். அப்போது எல்லாம் ரொம்ப ஜாலியாக இருக்கும் என்று ரொம்ப ஓபனாக சாஹல் பேட்டி அளித்தார்.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் நான் தேர்வாகமாட்டேன் என்று எனக்கு முன்பே தெரியும். என்றாலும்,இரண்டாவது முறை உலககோப்பையை கையில் ஏந்த ஆசைப்படுகிறேன் – இந்திய வீரர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்