ரஞ்சி போட்டியில் 77 பந்துக்கு ஒரு ரன் கூட அடிக்காமல் அவுட் ஆன என்னை . இந்த போட்டியில் அதிக ரன்கள் அடிக்க வச்சிட்டீங்களே – இந்திய வீரர்

lose-1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

அந்த 93 ரன்கள் இலக்கினை நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் எளிதாக எட்டியது . அந்த அணியின் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 37 ரன்களை குவித்தார். அதில் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அது யாதெனில் இந்திய அணி பேட்டிங் செய்த போது 10 ஆவது வீரராக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் களமிறங்கினார். அவர் 37 பந்துகளை சந்தித்து 18 ரன்களை அடித்தார். அதில் மூன்று பவுண்டரி அடங்கும் .

chahal

இதில் விசேஷசம் என்னவென்றால் ரஞ்சி போட்டிகளில் பேட்டிங் செய்யும்போது 77 பந்துகளை சந்தித்து ரன்கள் எடுக்காமல் அவுட் ஆனவர் சாஹல். அந்த அளவிற்கு அவர் பேட்டிங் மட்டம். ஆனால், இன்றைய போட்டியில் அவரை அதிக ரன் அடித்த இந்திய வீரராக பார்த்த ரசிகர்கள் இந்த செய்தியினை வைரலாகி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

இனி இவரது நேரம் உச்சம் தான். தோனியின் கையால் இந்திய அணி கேப்பை பெற்ற அறிமுக வீரர் – நெகிழ்ச்சி தருணம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்