இனி இவரது நேரம் உச்சம் தான். தோனியின் கையால் இந்திய அணி கேப்பை பெற்ற அறிமுக வீரர் – நெகிழ்ச்சி தருணம்

msd

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

trent

அந்த அணி வெறும் 14.4 ஓவர்களில் 93 ரன்கள் அடித்து இந்திய அணியை விரைவில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியினை பதிவு செய்தது. தங்களது தரப்பில் டெய்லர் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான போல்ட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும், இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினையும் போல்ட் தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் கோலிக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்தார் இளம் வீரர் கில். இது அவருடைய அறிமுக போட்டியாகும். 19 வயதே ஆன கில் 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆவார். இன்றைய போட்டியில் அறிமுகமான இவர் சீனியர் வீரரான முன்னாள் கேப்டன் தோனியிடமிருந்து இந்திய அணியின் தொப்பியினை பெற்றார்.

சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பாத்த நிலையில் 21 பந்துகளை சந்தித்து 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும், 19 வயதே ஆன கில் தன்னை நிரூபிக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன. தோனியின் கையில் இருந்து தொப்பி கிடைத்ததால் மகிழ்ச்சியில் உள்ளார் கில். இவர் இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே :

முதல் ஓவரின் மூன்று பந்துகள் 6,4,4 அடித்த குப்தில் ஆனால், நான்காவது பந்தில் அவரை தூக்கிய புவனேஷ்வர் குமார் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்