கொண்டைக்கடலையை வைத்து இந்த கட்லெட் செய்ய 10 நிமிடம் போதும். 2 ஸ்பூன் எண்ணெயில், மொறு மொறுப்பான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தயார்.

chenna-cutlet

கொண்டைக்கடலையை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் சுண்டல் அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு கொண்டைக்கடலை கட்லெட் அல்லது கொண்டைக்கடலை கபாப் என்று சொல்லப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு நிறைய எண்ணெய் கூட ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்லட் செய்வது போல் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த கொண்டை கடலை கட்லெட்டை 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.

kondai-kadalai

முதலில் கொண்டைக்கடலை கட்லெட் செய்ய தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். கருப்பு கொண்டை கடலை – 1 கப், பொட்டுக்கடலை – 1/4 கப், வரமிளகாய் – 3, சோம்பு – 1/4 ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 2 பல், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை பொடியாக நறுக்கியது.

முதலில் கொண்டைக்கடலையை 10 மணி நேரத்திற்கு முன்பாகவே தண்ணீரில் போட்டு ஊற வைத்து கழுவி தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

cutlet

அடுத்தபடியாக, ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையையும், வரமிளகாய் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொட்டுக்கடலையோடு சேர்ந்த வர மிளகாய் கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக,  ஊற வைத்த கொண்டைக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு, சோம்பு, பூண்டு, இஞ்சி இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து 90% அரைத்து கொள்ளவேண்டும். ரொம்பவும் நைசாகவும் அரைக்கக்கூடாது. ரொம்பவும் நறநறப்பாகவும் அரைத்துக் கொள்ளக் கூடாது.

- Advertisement -

முதலில் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவோடு, இந்த கொண்டைக்கடலை விழுதையும் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கரம் மசாலா, உப்பு கருவேப்பிலை கொத்தமல்லித் தழை சேர்த்து, நன்றாக பிசைய வேண்டும். உங்களுக்கு மசால் வடை மாவு பக்குவத்தில் கொண்டைக்கடலை கட்லெட் செய்ய மாவு தயாராகி இருக்கும்.

chenna-cutlet2

இதை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் தட்டி, தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஃபிரையிங் பேன் அல்லது தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, தட்டி வைத்திருக்கும் கட்லெடை ஒவ்வொன்றாக எடுத்து தோசைக்கல்லில் அடுக்கி வைத்து விடுங்கள்.

chenna-cutlet1

மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால் மொரு மொரு சுவையில், கொண்டைக் கடலைகளை கட்லெட் தயாராகி இருக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் இதை நிறைய எண்ணெயில் போட்டு பொரித்தும் பரிமாறலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க.

இதையும் படிக்கலாமே
உங்க சமையல் அறையில் இருக்கும் விடாப்பிடியான கரைகளை, சுலபமாக நீக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.