உங்க சமையல் அறையில் இருக்கும் விடாப்பிடியான கரைகளை, சுலபமாக நீக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

cleaning6
- Advertisement -

Tip No 1:
ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் கடாயை சமையலுக்கும் பயன்படுத்திய பின்பு, அதன் மேல் பக்கத்திலும், அடி பக்கத்திலும் லேசாக அடி பிடித்ததுபோல் நிறம் மாறியிருக்கும். இந்த அடிப்பிடித்த கடாயை, ஆப்ப சோடா மற்றும் பல் தேய்க்கும் பேஸ்ட் வைத்து சுலபமாக சுத்தம் செய்துவிடலாம். கொஞ்சமாக பல் தேய்க்கும் பேஸ்ட்டை கடாயில் கரை பிடித்திருக்கும் இடத்தில் தடவி, அதன் பின்பு ஸ்கிரப்பரில் ஆப்ப சோடாவை தொட்டு நன்றாக தேய்த்தால் கரை சுலபமாக நீங்கிவிடும். இதேபோல் எந்த பாத்திரத்தில், உள்பக்கத்தில் அடி பிடித்து விட்டாலும், அதன் உள்ளே கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு, இரண்டு மூடி வினிகரை ஊற்றி ஒரு நிமிடம் வரை கொதிக் கவிடுங்கள். அதன்பின்பு சாதாரணமாக நாரைக் கொண்டு தேய்த்தாலே, உள்ளே இருக்கும் அடிப்பிடித்த கரை அனைத்தும் சுலபமாக நீக்கிவிடும்.

cleaning7

Tip No 2:
உங்கள் வீட்டில் ஏர் டைப் கண்டைனர் இப்படி ரப்பர் ஃபிட்டிங் இருப்பது போல இருந்தால், அதை முழுமையாக மாதத்திற்கு ஒரு முறையாவது இப்படி சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் ஃபுட் பாய்சன் ஆவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. ஏர் டைட் கண்டைனரின் மூடியில் இருக்கும் நபரை தனியாக எடுத்து விடுங்கள். அந்த ரப்பர் இடுக்குகளிலும், மூடியின் இடுக்குகளிலும், கட்டாயமாக அதிகப்படியான அழுக்கு படிந்திருக்கும்.

- Advertisement -

இதை சுத்தம் செய்ய ஒரு அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் சுடுதண்ணீர், 2 மூடி வினிகர், பாத்திரம் லிக்விட் 1 ஸ்பூன், மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து இந்த மூடியையும், ரப்பரையும் 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு சாதரனமாக நாரைக் கொண்டு பாத்திரம் தேய்ப்பது போல தேய்த்து கழுவினால் சுலபமாக ஏர் டைட் கண்டைனரின் மூடி, ரப்பர் சுத்தமாகிவிடும்.

lid

Tip No 3:
ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா, வினிகர், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் தண்ணீர் சேர்க்கக் கூடாது. இந்த மூன்று பொருட்களையும் பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் விடாப்பிடியான எண்ணெய் கரை எங்கெல்லாம் உள்ளதோ அந்த இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தொட்டு லேசாக தேய்த்தாலே போதும். அந்தப் பிசுக்கு நீங்கி விடும். எடுத்துக்காட்டிற்கு சமையலறையில் இருக்கும் மேடை, டைல்ஸ், ஸ்டவ் இந்த இடங்களை இந்த பேஸ்ட்டை கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

குளியலறையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெட், ஜக் குளிப்பதற்காக பயன்படுத்தும் சிறிய ஸ்டூல், எல்லாவற்றையும் இந்த பேஸ்டை கொண்டு சுத்தம் செய்யுங்கள் பளபளப்பாக மாறும்.

jug

Tip No 4:
பாத்திரம் தேய்த்து கழுவி, சுத்தம் செய்த பாத்திரத்தை வைப்பதற்காக நம் எல்லோரது வீடுகளிலும் ஒரு கூடை இருக்கும். அந்தக் கூடையில் பாத்திரங்களை கவிழ்த்து வைத்தால், அந்த தண்ணீர் கீழே வடிந்து மேடையின் மீது படிந்து, உப்பு கரை திட்டுகள் அதிகமாக வரும். இதற்கு அந்த பாத்திரம் தேய்க்கும் கூடைக்கு அடியில், சிறிய அளவில் ஒரு பிளாஸ்டிக் ட்ரே அல்லது பெரிய அளவில் ஒரு தட்டை வைத்து விடுங்கள். பாத்திரத்திலிருந்து வடியும் தண்ணீர் அனைத்தும், அந்த ட்ரேவிலேயே நின்றுவிடும். கூடையிலிருந்து பாத்திரங்களை எடுத்து அடுக்கி வைத்துவிட்டு, அதன் பின்பு அந்த தண்ணீரை எடுத்து கீழே ஊற்றி விடலாம்.

- Advertisement -

kudai

Tip No 5:
உங்க வீட்டு ஜன்னல்களில் கொசு வலைகளை அடித்து வைத்திருந்தால், அதில் எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருந்தால், அந்த வலைகளை எல்லாம் கழட்டி முதலில் தூசை தட்டி விடுங்கள். அதன் பின்பு ஒரு அகலமான பேசினில் தண்ணீர் ஊற்றி, அதில் துணி துவைக்கும் லிக்விட், ஆப்ப சோடா, வினிகர், இந்த மூன்று பொருட்களை போட்டு நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு வகைகளை 1/2 மணி நேரம் ஊற வைத்து, சாதாரண தண்ணீரில் அலசி எடுத்தாலே அழுக்கு சுத்தமாக போய்விடும். துணி துவைக்கும் பவுடரும் சேர்க்கலாம். இருப்பினும் பவுடர், கரையாமல் ஆங்காங்கே படிந்து இருக்கும் என்பதால் லிக்விட் சேர்த்தால் சுலபமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
பணத்தை இந்த இடத்தில் மட்டும் வைத்து விட்டால் பணம் 1 ரூபாய் கூட சேரவே சேராது! வீட்டில் பணம் வைக்கக்கூடாத இடம் எது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -