உங்களின் சந்திராஷ்டம தின தோஷம் நீங்க இம்மந்திரம் துதியுங்கள் போதும்

chandran
- Advertisement -

நமது தமிழ் மாதங்கள் அனைத்தும் சந்திரன் 27 நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் தினங்களை கொண்டே கணக்கிடப்படுகின்றன. இந்த 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தினங்கள் சந்திராஷ்டம தினங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சந்திராஷ்டம தினங்களில் சந்திரனின் தோஷம் அந்த நட்சத்திரக்காரர்களை பிடிக்கிறது. அவை அனைத்தையும் நீக்கும் “சந்திர பகவான் துதி” இதோ.

Lord-Chandra

சந்திர பகவான் துதி

ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்

- Advertisement -

தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்

chandra bagavan

மனித மனங்களை கட்டுப்படுத்தும் சந்திர பகவானின் துதி இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 11 முறை துதிப்பது நல்லது. திங்கட்கிழமைகள், மாதத்தில் உங்கள் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம தினங்கள், பௌர்ணமி தினங்களில் இந்த துதியை துதித்து வழிபடுவதால் சந்திராஷ்டம தோஷங்கள் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.

- Advertisement -

Chandra Baghavan

வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன் என்பதே இந்த துதியின் பொதுவான பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
வீண் விரயங்கள் தடுக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandra bhagavan thuthi in Tamil. It is also called as Chandra bhagavan mantra Tamil or Chandra bhagavan slokam Tamil or Chandrashtama mantra in Tamil or Chandra bhagavan manthiram in Tamil.

- Advertisement -