உங்களுக்கு எத்தகைய இழப்புகள், விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும் மந்திரம் இதோ

sivan

வாழ்க்கையில் செல்வம் மட்டுமல்ல மற்ற அனைத்தும் கூட விலைமதிப்பற்றவை ஆகும். இத்தகைய செல்வங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்கு முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் இழப்புகள், விரயங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இவற்றையெல்லாம் போக்கும் “பரமேஸ்வரன் மந்திரம்” இதோ.

sivan

பரமேஸ்வரன் மந்திரம்

து ஸ்வப்ந துஸ்ஸகுன துர்கதி தௌர்மனஸ்ய
துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யஸாம்ஸி

உத்பாததாப விஷபீதிமஸத்க்ரஹார்தி
வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ

sivan

கயிலாயத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் பரமேஸ்வரனாகிய சிவபெருமானுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் துதித்து வருவது சிறந்தது. சிவபெருமானின் வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமைகள், பிரதோஷம், மாத சிவராத்திரி தினங்களில் 108 முறை துதிப்பதால் உங்கள் வாழ்வில் பொருள் மற்றும் பிற எந்த விடயங்களிலும் இழப்புகள், விரயங்கள் போன்றவை ஏற்படாது.நோய்கள், மனக்கவலைகள், வறுமை நிலை போன்றவை அறவே நீங்கும்.

- Advertisement -

Sivan

உலகத்தை ரட்சிப்பவனே, பரமேஸ்வரா, நான் காணும் கெட்ட கனவுகள் பலிக்காமல் போக அருள்வாயாக. நான் சந்திக்கும் கெட்ட சகுனங்கள் எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதிருக்கச் செய்வாயாக. மிகுந்த உடல் கஷ்டம், மனக்கவலை, பஞ்சம், துக்கம், அவமானத்தில் ஆழ்த்தும் கெட்ட கீர்த்தி போன்றவை என்னை நெருங்காதபடி அருள் செய்யுங்கள். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளையும் கிரக மாற்றங்களால் ஏற்படும் கவலை, நோய், இழப்புகள் எல்லாவற்றையும் நாசம் செய்வீர்களாக. என் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக ஒளிர அருள் செய்யுங்கள் என்பதே மேற்கண்ட மந்திரத்தின் பொது பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
தரித்திர நிலை போக்கும் ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Parameshwara mantra in Tamil. It is also called as Sivaperuman slokam in Tamil or Sivan manthiram in Tamil or Siva manthirangal in Tamil or Sivaperuman thuthi in Tamil or Siva manthiram in Tamil.