இன்று சந்திர கிரகணம். கிரகண நேரத்தின் போது இந்த ராசிக்காரர்கள் மட்டும் வெளியே வராதீங்க. கிரகணம் முடிந்த பின்பு பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய நட்சத்திரங்கள் என்னென்ன?

chandra-grahanam
- Advertisement -

இன்று மாலை 5:32 மணி முதல் 6:18 வரை சந்திர கிரகணம் நடைபெறவிருக்கிறது. இந்த சந்திர கிரக நேரத்தின் போது அதிக கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை. அதே சமயம் கிரகணம் முடியும் போது எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும், குறிப்பிட்ட அந்த பரிகாரம் என்ன என்பதை பற்றிய சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு:
இன்றைய தினம் முதலில் கவனமாக இருக்க வேண்டிய பட்டியலில் இருப்பவர்கள் கர்ப்பிணி பெண்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். கர்ப்பிணி பெண்கள் கிரக நேரத்தில் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றால், தர்ப்பை புல்லை உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் சிறிய அளவு இருக்கக்கூடிய தர்ப்பை புல் பாயை எடுத்து உங்களுடைய தொப்புள் கொடியின் மேல் போட்டுக் கொள்ளலாம். கிரகண நேரத்தில் இருக்கக்கூடிய கெட்ட கதிர்வீச்சு உங்கள் குழந்தையை தாக்காமல் இருப்பதற்கு இந்த தர்ப்பை புல் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். தர்ப்பை பாய் கிடைக்கவில்லை என்றால் சிறிதளவு தர்ப்பை புல்லையாவது எடுத்து கிரகண நேரம் முடியும் வரை உங்களுடைய தொப்புள் கொடி மேல் படும்படி வைத்துக் கொள்ளுங்கள் நல்லது.

- Advertisement -

கிரகணம் முடிந்த பின்பு பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரம்:
அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம், இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகண நேரம் முடிந்தவுடன் தலைக்கு குளித்துவிட்டு வீட்டை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று ராகு பகவானுக்கு உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சந்திர பகவானுக்கும் உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். நவகிரகங்களில் உள்ள ராகு சந்திரன் இருவருக்கும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வெள்ளை நிற வஸ்திரம், நெல், வெற்றிலை பாக்கு வைத்து யாருக்கேனும் தானம் கொடுக்க வேண்டும். அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு கூட இந்த தானத்தை செய்யலாம். இதை சந்திர ப்ரீத்தி பரிகாரம் என்று சொல்லுவார்கள்.

கிரகண நேரத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
மேஷ ராசியில் உள்ள பெண்கள் கிரகண நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். அதே சமயம் கிரகண நேரத்தின் போது உங்களுடைய மனதிற்குள் ஏதாவது உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை ஜெபமாக சொல்லுங்கள். சிம்ம ராசிக்காரர்கள், தனுசு ராசிக்காரர்கள், மீன ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

வெளியில் செல்ல கூடாத ராசி:
குறிப்பாக மகர ராசிக்காரர்கள் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. கூடுமானவரை வெளியிடங்களுக்கு பிரயாணம் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படியே உங்களுக்கு வெளியில் பிரயாணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ராமஜபம் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் நாராயணனின் பேரை உச்சரிக்கலாம். அல்லது ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

இதையும் படிக்கலாமே: சந்திர கிரகணம் 2022 எப்போது, நேரம்

கிரகண நேரத்தின்போது கூடுமானவரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பாதீங்க. வெளியிடங்களில் பெரியவர்கள் இருப்பதை கூட தவிர்ப்பது நல்லது. கிரகண நேரத்தில் எந்த பிரச்சனையிலும் போய் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அனைவருமே அவரவர் வீட்டில் இருந்தபடி அவரவருக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பதன் மூலம் வரக்கூடிய பிரச்சனைகளின் பாதிப்பு குறையும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -