இன்று ஏற்படவிருக்கும் சந்திர கிரகணத்தால் எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்

Chandra graganam 2018

இப்போது நாம் வாழும் இந்த பூமி சூரியனை பிரதானமாக கொண்ட சூரிய குடும்பத்தின் சுற்று வட்ட பாதையில் நான்காவது கிரகமாக இருக்கிறது.அப்படியான இந்த பூமியின் மீது இந்த அண்டவெளியில் உள்ள அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தனது ஆற்றலை செலுத்தினாலும், சூரியன் மற்றும் சந்திரன் ஏற்படுத்துகின்ற தாக்கத்தை அது ஏற்படுத்தாது. பகலில் சூரியன் தரும் வெளிச்சத்தையும் ஆற்றலையும் இரவில் வளர்பிறை காலத்தில் சந்திரன் தரும் ஒளியும், குளுமையும் உணராத உயிரினங்கள் இந்த பூமியில் இல்லை.

Chandra grahanam

இந்த இரு கிரகங்கங்களும் இங்கு வாழும் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. நமது ஜோதிட சாத்திரத்திலும் சூரியன் நமது மனித உடலுக்கும், சந்திரன் மனிதனின் மனதிற்கும் காரகர்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதிலும் இந்த சூரிய மற்றும் சந்திர கிரகண காலங்களில் இந்த பூமியின் மீது ஒரு வகையான சக்தியின் தாக்கம் ஏற்படுகிறது அந்த நேரங்களில் நாம் சில ஆக்கபூர்வமான மந்திர ஜெபம் தியானம் போன்றவற்றை செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும். அந்த வகையில் இந்த வருடத்தின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் இந்த “சந்திர கிரகணம் இந்த “ஜூலை மாதம் 16 ஆம் தேதி இரவு 12.13 மணிக்கு தொடங்கி மறுநாள்(ஜூலை 17) அதிகாலை 04.30 மணி வரை  நிகழவிருக்கிறது“..

chandra grahanam

இந்த சந்திர கிரகண காலங்களில் அந்த கிரகணம் ஏற்படும் நாள், கிழமை, நேரம், திதி, போன்றவைகளை காரணமாக கொண்டு 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களில் சில நட்சத்திரகாரர்களுக்கு சில கெடுதலான பாதிப்புகளை இந்த சந்திர கிரகணம் ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில் கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் இப்போது ஏற்படவிருக்கும் சந்திர கிரகணத்தினால் பாதிப்பை சந்திக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு சந்திர கிரகண கால சாந்தி பரிகாரங்களை செய்வதும், சந்திர பகவானுக்குரிய மந்திரம் அதை ஜெபிப்பதும் நல்லது.

- Advertisement -

எளிய பரிகாரம்:
சந்திர கிரகண காலத்தில் சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த தரமான அரிசியை ஏழைகளுக்கும், துறவிகளுக்கும் தர்மம் வழங்குவது சிறப்பு.

chandra bagavan

சந்திர பகவான் துதி :
அலைகடல் அமுதங் தன்னோ டன்றுவந் துதித்து மிக்க
கலைவளர் திங்க ளாகிக் கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பாகன் செஞ்சடைப் பிறையாய் மேரு
மலைவல மாக வந்த மதியமே போற்றி போற்றி.

கிரகணம் முடிந்த உடன் குளித்து விட்டு கோயிலிற்கு சென்று வருவது நல்லது.

இதையும் அப்பிடிக்கலாமே :
சந்திர கிரகணம் சமயத்தில் செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை

English Overview:
Here we have Chandra Grahan 2019 dates and time in India in Tamil and aslo we specified Chandra Grahan pariharam in Tamil.