நாளை சந்திர கிரகணம் – இவற்றையெல்லாம் செய்தால் மிக அற்புதமான பலன்கள் உண்டு

chandra-grahanam

விண்வெளி என்பது பல அதிசயங்கள் நிறைந்த ஒரு இயற்கை அதிசயம் ஆகும். விண்வெளிக்கும், இறைவனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அது என்னவென்றால் இந்த இரண்டின் தோற்றம் மற்றும் முடிவை எவராலும் அறிய முடியாது. எனவே தான் சைவர்கள் சிவபெருமானை பஞ்ச பூதங்களில் ஆகாயத்துடன் தொடர்புபடுத்தி, சிதம்பரத்தில் நடராஜ பெருமானாக வழிபடுகின்றனர். இப்படி பல அற்புதங்கள் கொண்டிருக்கும் விண்வெளியில் வருடத்திற்கு ஒருமுறை அல்லது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்ற அதிசயம் கிரகணங்கள் ஆகும். கிரகணங்களில் சூரியகிரகணம், சந்திரகிரகணம் என இரண்டு வகைகள் உள்ளன. இதில் சந்திர கிரகணம் ஏற்படும் போது நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

chandra grahanam

நாளை (16-07-2019) இரவு சுமார் 01.32 மணி முதல் நாளை அதிகாலை 04.30 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இந்த சந்திர கிரகணம் பௌர்ணமி திதி, உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் தொடங்குகிறது. கர்பிணி பெண்கள், வயதானோர், நோயுற்றவர்கள், குழந்தைகள் போன்றோர்களுக்கு கிரகண தீட்டு காலம் இரவு 10.02 மணிக்கு துவங்குவதால் அவர்கள் அதிகம் வெளியில் நடமாடாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தபடி தெய்வ மந்திரங்களை துதித்து வழிபடுவதில் கிரகண தோஷத்திலிருந்து விடுபடலாம்.

சந்திர கிரகணம் ஆரமிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பில் இருந்து எதையும் உண்ணக்கூடாது. வீட்டில் ஏதேனும் உணவை சமைத்து வைத்திருந்தால் அதில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். கிரகணம் முடிந்து குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே உணவருந்த வேண்டும்.

food

கிரகணம் ஏற்படும் சமயத்தில் கோவில்கள் அனைத்தும் மூடி இருக்கும். ஆகையால் வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யலாம், இறைவனின் நாமத்தை ஜபித்தவாறு இருக்கலாம். சந்திர கிரகண காலத்தில் நாம் செய்யும் மந்திர ஜபங்கள் நமக்கு அளவற்ற பலன்களைத் தரும். அப்போது நாம் செய்யும் மந்திர ஜபம் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன்களை கொடுக்க வல்லதாக இருக்கிறது. குறிப்பாக உபநயனம் செய்விக்கப்பட்டு பிரம்மோபதேசம் செய்விக்கப் பட்டவர்கள் கண்டிப்பாகக் கிரகண காலத்தில் மந்திர ஜபம் செய்ய வேண்டும். மேலும் சந்திர கிரகண காலம் காயத்ரி மந்திரம் ஜபம் செய்வதற்கு உகந்த நேரமாக இருக்கிறது.

- Advertisement -

பெண்கள் உள்பட மற்றவர்கள், தங்கள் குருநாதர் மூலம் மந்திரோபதேசம் பெற்றிருந்தால் அந்த மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ஜபம் செய்யலாம். அப்படி மந்திர உபதேசம் பெறாதவர்கள், இறைவழிபாடுகளில் ஈடுபடலாம். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்ற தெய்வப் பாடல்களை பாராயணம் செய்யலாம். அல்லது, ‘ஓம் நமசிவாய’, ‘ஓம் விஷ்ணவே நம:’, ‘ஓம் நாராயணாய நம’ என்ற நாமாவளிகளை ஜபிக்கலாம். குலதெய்வ மந்திரங்களையும் துதிக்கலாம்.

கிரகணம் முடிந்த பிறகு தர்ப்பணம் செய்வது நல்லது. இதனை கிரகண தர்ப்பணம் என்பர். இதன் மூலம் கிரகணத்தால் ஏற்படக்கூடும் தோஷங்கள் அனைத்தும் விலகும், புண்ணியம் பெருகும். தந்தை உயிரோடு இருப்பவர்கள் தர்ப்பணம் செய்ய்யக்கூடாது. அவர்கள் தங்களால் இயன்ற தானங்களை செய்யலாம். கிரகணம் துவங்குவதற்கு முன்பும் கிரகணம் முடிந்த பிறகும் நிச்சயம் நீராட வேண்டும்.

சந்திர கிரகணம் முடிந்ததும் கடக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதமான ஆடி மாதம் பிறப்பதால் சூரிய உதயத்திற்கு முன்பாக மீண்டும் நீராடி விட்டு மாத தர்ப்பணம் கொடுக்க வேண்டும் ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் கொடுக்கலாமா என்கிற சந்தேகம் சிலருக்கு ஏற்படுவது எதார்த்தம். எனினும் வேதம் அறிந்த சான்றோர்கள் இவ்வாறு பௌர்ணமி தர்ப்பணம் மற்றும் மாத தர்ப்பணத்தை ஒரே நாளில் கொடுப்பதால் ஏதும் இல்லை எனவும், இதனால் மிகுந்த நன்மையே தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு உண்டாகும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர் கிரகணம் முடிந்ததும் அருகில் உள்ள கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும். கிரகணம் முடிந்த பிறகு பசியால் வாடும் ஏழைகளுக்கு அரிசியை தானம் செய்வதன் மூலம் நமக்கு புண்ணியம் பெருகும்.

Amavasai Tharpanamஇந்தியா மட்டுமின்றி பிரிட்டன், அரபு நாடுகள், இலங்கை, நேபாளம், மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சந்திர கிரகணம் ஏற்படும் என்பதால், அங்கே வசிக்கும் இந்தியர்களும் மேலே சொன்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். வட அமெரிக்காவில் சந்திர கிரகணம் தெரியாது என்பதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் மேற்சொன்ன கிரகண சம்பிரதாயங்களை கடைப் பிடிக்கத் தேவையில்லை.

இதையும் படிக்கலாமே:
குறையாத பணவரவிற்கு இவற்றை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we described Chandra grahanam 2019 do’s and don’ts in Tamil. It is also called as Chandra grahanam timings in Tamil or Chandra grahan palangal in Tamil or Chandra grahana tharpanam in Tamil.