கிரகண நேரத்தில் இதை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா ?

chandra-graganam-2

இரவு நேரத்தில் வானில் பார்ப்பதற்கு அழகாக பல நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. இந்த வானியில் அழகுக்கு மகுடம் சேர்ப்பது வெண்ணிறமான சந்திரன் ஆகும். அதுவும் பௌர்ணமி தின சந்திரனின் அழகை கண்டு யாரும் மனம் மகிழாமல் இருக்க முடியாது. இப்படியான பௌர்ணமி தினத்தில் தான் பெரும்பாலும் வானில் நிகழும் இயற்கையின் அற்புதமான “சந்திர கிரகணம்” ஏற்படுகிறது. நமது இந்து மத புராணத்தில் இந்த சந்திர கிரகணம் ஏற்பட்ட காரணம் குறித்தும், இக்கிரகண வேளையில் நாம் செய்ய வேண்டியதை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

Chandra grahanam

நமது மத புராணத்தில் தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்த கதையை மேலோட்டமாகவாவது பெரும்பான்மையானவர்கள் அறிந்திருக்கிறோம். பாற்கடலில் இறுதியாக இறவா தன்மையை அளிக்கும் “தேவாமிர்தம்” கிட்டியது. இதை அசுரர்கள் உண்டு சாகாவரம் பெற்றுவிட்டால் எல்லோருமே துன்பப்பட நேரும் என எண்ணிய மகாவிஷ்ணு, “மோகினி” அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அவர்களின் கவனத்தை திசை திருப்பி அந்த தேவாமிர்தத்தை கொண்டு வந்து தேவர்களுக்கு விருந்தளித்தார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணி அசுரர்கள் வருந்திய போது அந்த அசுரர்கள் கூட்டத்தில் “ஸ்வர்ணபானு” என்ற அரக்கன் இருந்தான். இவன் எந்த ஒரு தேவரோ அல்லது மனிதரை போன்ற உருமாறும் திறன் கொண்டவன். இந்த ஸ்வர்ணபானு தேவர்களின் உருவம் தரித்து விஷ்ணுவிடம் இருந்து தேவாமிர்தத்தை பெற்று உண்டு விட்டான்.

தேவர்கள் கூட்டத்தில் ஸ்வர்ணபானுவை கண்ட சூரியனும், சந்திரனும் ஸ்வர்ணபானு அரக்கர் குலத்தை சார்ந்தவன் என அவனை மகாவிஷ்ணுவிடம் காட்டிக்கொடுத்தனர். இதையறிந்த மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவின் தலையை கொய்தார். ஆனால் இறவா தன்மை கொண்ட தேவாமிர்தம் உண்ட காரணத்தினால் ஸ்வர்ணபானு இறக்காமல் அவனது “தலை பகுதி” “ராகுவாகவும்” “உடல் பகுதி” “கேதுவாகவும்” மாறியது. தன்னை காட்டிக்கொடுத்த சூரியன் மற்றும் சந்திரனை பழிவாங்க சூரிய, சந்திர கிரகங்களின் போது ராகு மற்றும் கேது “பாம்பு” போல் அவர்களின் வெளிச்சத்தை விழுங்குவதாக பொதுவாக நம்பப்படுகிறது.

Rahu Kethu

இந்த கிரகண நேரங்களில் சூரியன் மற்றும் சந்திர கிரகங்களின் சக்திகள் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானின் ஆதிக்கத்திற்கு அடங்கியே இருக்கும். இந்த கிரகண வேளைகளில் தேவ தன்மை வாய்ந்த மற்றும் உலகிற்கு நன்மைகள் அளிக்கும் சூர்ய மற்றும் சந்திர கிரக ஒளிரேகைகள், அசுர தன்மை கொண்ட ராகு கேது நிழல்களால் மறைக்கப்பட்டு இருள் சூழ்வதால் மெய்ஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான ரீதியாக இந்த பூமியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே தான் இந்த கிரகண வேளைகளில் கோவில்கள் மூட படுகின்றன. மற்ற மங்கல நிகழ்ச்சிகள் எதுவும் செய்யப்படுவதில்லை.

- Advertisement -

chandra grahanam

இந்த நேரத்தில் ராகு மற்றும் கேது கிரகங்கள் சக்தி பெற்றிருப்பதால், இந்த இரு பகவான்களையும் சாந்திபடுத்தும் மந்திரங்களை, இந்த சந்திர கிரகணம் நடைபெறும் வேளையில் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ஜெபித்தால், இதனால் ஜாதகத்தில் உங்களுக்கு பாதகமான இடத்தில் இருக்கும் ராகு மற்றும் கேது கிரகங்களினால் ஏற்படும் கெடுதலான பலன்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இன்றைய கிரகண நேரம் : இரவு 11.54 முதல் நாளை அதிகாலை 3.55 மணி வரை ஆகும்.

இதையும் படிக்கலாமே:
சந்திர கிரகண நட்சத்திர பரிகாரம்

English Overview:
Chandra grahanam 2018 details in Tamil and what are the mantra we need to chant at grahanam time are suggested here.