உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் மட்டும் பலம் இல்லை என்றால் வாழ்க்கையையே வெறுத்து விடுவீர்கள்! அதிலிருந்து மீள இதை செய்யுங்கள்!

chandran-sad-men

ஒருவருடைய ஜாதகத்தில் நவக்கிரகங்களும் ஆட்சி செய்யும் பொழுது இந்த கிரகம் பலமிழந்து காணப்பட்டால் உடலளவிலும், மனதளவிலும் சோர்வு உண்டாகும். முகத்தில் பொலிவு குறைந்து மந்தமாக காணப்படுவார்கள். எதிலும் தோல்வியும், மனதில் சஞ்சலமும் ஏற்படும். மனதிற்கு காரகத்துவம் பெற்ற ‘சந்திரன்’ தான் அந்த கிரகம் ஆவார். சந்திரன் நீசம் பெறும் பொழுது வாழ்க்கையையே வெறுத்து விடுவார்கள். அதே சந்திரன் உச்சம் பெறும் பொழுது தோற்றத்தில் மிகவும் அழகாக மாறிவிடுவார்கள்.

chandrashtama

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். எதையும் சாதிக்கும் உத்வேகம் உண்டாகும். இத்தகைய ஆற்றல்களை பெற்றுள்ள சந்திர பகவான் நீசம் பெறும் பொழுது உண்டாகும் தோஷங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த பரிகாரங்களை செய்யலாம். என்ன செய்யலாம் என்று இனி பார்ப்போம்.

சந்திரன் நீசம் பெறும் பொழுது நீங்கள் நம்பிய சிலரால் ஏமாற்றப்படுவீர்கள். இதனால் மனம் வெதும்பி போய் மிகவும் சோர்ந்து காணப்படுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அமாவாசைக்கு பிறகு வரும் 14 நாட்கள் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிட்டால் அதாவது நிலாச்சோறு சாப்பிட்டால் மனம் தெளிவுறும். மனதிற்கு அதிபதியாக இருக்கும் சந்திரபகவானை வழிபாடு செய்வதால் மனதை ஒருமுகப்படுத்துவது எளிதாக இருக்கும்.

fish

ஊஞ்சல் ஆடுவது, பல வண்ண நிறங்களில் மீன்களை வீட்டில் வளர்ப்பது போன்ற செயல்களை அடிக்கடி செய்வதன் மூலம் மனதை சாந்தி செய்யலாம். நீங்கள் அந்த மீனை அடிக்கடி பார்க்கும் பொழுது சந்திர தோஷங்கள் நீங்கப் பெறுகிறது. சுயதொழில் மற்றும் மாத சம்பளம் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும், சந்திரன் அதிகாரம் செலுத்தும் எந்த தொழிலிலும் வெற்றி பெற முடியாது. தொடர்ந்து தடங்கல்களும், பல்வேறு தோல்விகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சந்திரன் சம்பந்தப்பட்ட தொழிலை சந்திரன் நீசம் அடையும் பொழுது அந்த ஜாதகர் தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். எதையாவது யோசித்து டென்ஷனாகி கொண்டே இருக்கக்கூடாது. தூசு, மாசு போன்ற விஷயங்களில் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆயுதம் இல்லாமல் இருக்கும் சாத்வீக அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். அருகம்புல் சாற்றை அடிக்கடி குடித்தால் உடல்ரீதியாக இருக்கும் பிரச்சினைகளும் தீரும்.

kumari-amman

சந்திரன் பலம் இழந்து காணப்படும் பொழுது யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். யார் எது கேட்டாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட வேண்டும். அடிக்கடி தலைக்கு குளிப்பது, அடிக்கடி நீச்சல் அடிப்பது, அதிக வெயிலில் வேலை செய்வது, அதுபோல் அதிக குளிரை தாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

hari-chandran

சந்திரனுடைய ஆசி இருந்தால் அழகான தோற்றமும், பெண்கள் மூலம் லாபமும், அதிர்ஷ்டங்களும், திடீர் பணவரவு, திடீர் வெற்றிகள் போன்றவையும் ஏற்படும். சந்திரனை பொறுத்தவரை சுப மற்றும் அசுப பலன்கள் இரண்டையுமே கொடுப்பவர் ஆவார். வளர் பிறையில் இருக்கும் பொழுது சுப பலன்களையும், தேய் பிறையில் இருக்கும் பொழுது அசுப பலன்களையும் கொடுப்பார். இவற்றை கடைபிடிக்கும் பொழுது மனதால் ஏற்படும் கஷ்டங்களும், துன்பங்களும் தீரும் என்பது ஐதீகம்.