சந்திராஷ்டம தின பரிகாரம்

Guru Thatchinamurthi
- Advertisement -

பௌர்ணமி தினத்தன்று இரவில் முழு நிலவு தெரிவது அனைவரும் விரும்பும் ஒரு காட்சியாகும். சந்திரன் கிரகம் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடந்து சென்று அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களையும் கணக்கிட்டு ஒரு மாத காலம் என கூறுகிறோம். இதில் தினம்தோறும் வெவ்வேறு நட்சத்திரங்களில் சந்திராஷ்டமம் வருகிறது. இந்த சந்திராஷ்டமம் என்றால் என்ன என்பதையும், அதற்கான பரிகாரங்களையும் இங்கு காண்போம்.

Moondram pirai

சந்திராஷ்டம பரிகாரம்

சந்திராஷ்டமம் என்பது ஒவ்வொரு ராசியினருக்கும் அவர்கள் ராசிக்கு எட்டாமிடத்திலிருக்கும் ராசியை சந்திரன் கடந்து செல்லும் தினமே “சந்திராஷ்டம தினம்” ஆகும். அதிலும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் உங்கள் நட்சத்திரத்திற்கு 17 ஆவது நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் நாள் சந்திராஷ்டம தினம். இந்த சந்திராஷ்டம தினங்களில் பொதுவாக தடைகள் மற்றும் தாமதங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக இந்த சந்திராஷ்டம தினங்களில் சுப காரியங்களை செய்வதை தவிர்க்கின்றனர். தொலைதூர பயணங்கள், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான விடயங்களையும் செய்வதில்லை.

- Advertisement -

சந்திராஷ்டம தினத்தில் வீட்டில் பொங்க வைக்கப்படும் பால் திரிந்து போவது, தூய்மையான ஆடைகளில் ஏதேனும் பட்டு கறைபடிவது, சாப்பிடும் உணவு பொருட்கள் வீணாவது போன்றவை தன்னிச்சையாக நடக்கும் பட்சத்தில் சந்திராஷ்டம தோஷம் நீங்குவதாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் கிரகங்களில் முழு சுப கிரகமான குருபகவானை வழிபடுவது சந்திராஷ்டம தோஷத்தை போக்கும்.

chandra bagavan

சந்திராஷ்டம தினத்தன்று காலை அல்லது மாலை வேளையில் விநாயகர் மற்றும் அம்பாள் தெய்வங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று பாலபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. கைகளில் குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட விரளி மஞ்சளை ஒரு மஞ்சள் கயிற்றில் முடிந்து கையில் காப்பாக கட்டிக்கொள்வதும் சிறந்த பரிகாரம் ஆகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
முருதேஸ்வரர் கோவில் பற்றிய தகவல்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், பஞ்சாங்க குறிப்புகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Chandrashtama pariharam Tamil. It is also called as Chandrashtama days pariharam in Tamil. Chandrashtama palangal in Tamil are explained a little bit here.

- Advertisement -