சந்திராஷ்டமம் வரும் நாளை கண்டு இனி பயப்பட வேண்டாம். இதை மட்டும் செய்யுங்க போதும். சந்திராஷ்டமம் உங்களுக்கு நல்லதை மட்டுமே தரும்.

- Advertisement -

நாளை நம்முடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்று காலண்டரில் பார்த்துவிட்டால் போதும். அவ்வளவு தான். அதை நினைத்தே சில பேர் சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள். சந்திராஷ்டமும் அவ்வளவு லேசுபட்ட விஷயமல்ல. மத்த நாட்களில் எல்லாம் சந்தோசமாக தான் இருப்போம். ஆனால் இந்த சந்திராஷ்டமம் வந்த நாளில் நம்மை அறியாமலேயே நம்முடைய மனது குழப்பமாகி விடும். தேவையல்லாத வாய்ச்சண்டை வம்பு தகராறில் போய் நாமே சிக்கிக் கொள்வோம். இந்த சந்திராஷ்டம நாளில் வரும் கஷ்டங்களில் இருந்து எப்படி தப்பிப்பது. சாஸ்திர ரீதியாக உங்களுக்காக சில குறிப்புகள் இதோ.

சந்திராஷ்டம நாள் என்று உங்களால் முடிந்த வரை ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எந்த உதவியாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு ஊனமுற்றவர்களுக்கு அந்த உதவியை செய்து விடுங்கள். குறிப்பாக குஷ்டம் வியாதி உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை இந்த சந்திராஷ்டம நாளில் செய்வது நல்லது.

- Advertisement -

சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். இந்த நெல்லை சந்திராஷ்டம தினத்தில் யாருக்கேனும் தானமாக கொடுக்க வேண்டும். ஒரே ஒரு நெல் மணியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் அந்த நெல் மணியை வைத்து விட்டு, ஒரு டேப் போட்டு அப்படியே ஒட்டிக் கொள்ளுங்கள். அதாவது அந்த நெல்மணி உங்கள் உடம்புடன் உரசி இருக்க சந்திராஷ்டம தினத்தில் வீண் பிரச்சனைகள் வராது. (வெளி ஆட்களுக்கு தெரியாமல் ஆடையின் உள் பக்கத்தில் இதை ஒட்டி வைத்துக்கொள்ளலாம்.)

காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு உங்களுடைய வலது கையை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, முதலில் அம்பாளை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். எந்த அம்பாளாக இருந்தாலும் சரி, அம்மனை மனதார நினைத்து ‘ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ’ என்ற மந்திரத்தை உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரித்து விட்டு, அதன் பின்பு சந்திராஷ்டம நாளை தொடங்கினால் உங்களுக்கு பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது.

- Advertisement -

முடிந்தால் உங்கள் வீட்டின் அருகில் சிவன் கோவில் இருந்தால், அந்த கோவிலில் இருக்கும் அம்பாளை சந்திராஷ்டம நாளில் தரிசனம் செய்துவிட்டு வருவது சிறப்பு. குறிப்பாக சந்திராஷ்டம நாள் என்றால் அந்த நாளில் மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் நாம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது. யாருக்காவது உடல்நிலை சரியில்லை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் அந்த நபருக்கு சந்திராஷ்டமம் உள்ள நாளன்று அறுவை சிகிச்சையை செய்யக்கூடாது.

அப்படி செய்தால் அது மீண்டும் மீண்டும் பிரச்சனையை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வேறு வழியே இல்லை டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டாங்க. அன்று அந்த அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் எனும் பட்சத்தில் என்ன செய்வது.

அவர்களுடைய உறவினர்கள் யாராவது, உடல்நிலை சரியில்லாத அந்த நபரின் தலையில் கை வைத்து அம்பாளை நினைத்துக் கொண்டு ‘ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ’ என்ற மந்திரத்தை மனதார உச்சரித்தால் பெரிய பாதிப்புகள் எதுவும் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். (குறிப்பிட்ட அந்த நபரின் அம்மா அப்பா மகன் அல்லது மகள் மனைவி யார் வேண்டும் என்றாலும் இதை செய்யலாம்.) நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் அடையலாம் என்ற கழுத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -