இந்த டால் பூரியை ஒரு முறை சுட்டு ருசித்து விட்டால், பிறகு நம்ம வீட்டில் செய்யுற சாதாரண பூரியை தொடக்கூட மாட்டீங்க.

poori
- Advertisement -

வட மாநிலத்தவர்கள் அடிக்கடி செய்யக்கூடிய டால் பூரி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்றைய சமையல் குறிப்பு. பெரும்பாலும் நாம் எல்லோர் வீட்டிலும் சாதாரணமாக கோதுமை மாவில், மைதா மாவில் பூரி செய்வது வழக்கம். அதேபோல கொஞ்சம் வித்தியாசமாக சில மசாலா பொருட்களை எல்லாம் சேர்த்து பூரி செய்யப் போகின்றோம். வடமாநிலத்தவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய கச்சோடி சுவையில் இந்த பூரி இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு ரைத்தா இருந்தால் போதும். அது எந்த தயிர் பச்சடியாக இருக்கட்டும். வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம் போட்ட தயிர் பச்சடி எதுவாக இருந்தாலும் இதற்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.

செய்முறை

இதற்கு நமக்கு முதலில் 1/2 கப் அளவு கடலைப்பருப்பு தேவை. முந்தைய நாள் இரவே 1/2 கப் அளவு கடலைப்பருப்பை சுத்தமாக கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வையுங்கள். 8 மணி நேரம் கடலை பருப்பு ஊறட்டும். மறுநாள் காலை மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பை தண்ணீரை வடித்து போடவும். இதோடு பூண்டு தோல் உரித்தது 3 பல், இஞ்சி 1 இன்ச் தோல் சீவியது, சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், கஸ்தூரி மேத்தி 1/2 ஸ்பூன், முழு மிளகு 5, கிராம்பு 2, பெருங்காயம் 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு நைசாக விழுதாக அரைக்க வேண்டும்.

- Advertisement -

கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை ஒரு அகலமான பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இதோடு 2 டேபிள் ஸ்பூன் ரவை, போட்டு நன்றாக கலந்து ஒரு பத்து நிமிடம் மூடி வையுங்கள். ரவை அரைத்த கடலை மாவில் நன்றாக ஊறிவிடும். பிறகு இதோடு கோதுமை மாவு 2 கப், தேவையான அளவு உப்பு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், ஓமம் சிறிதளவு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு, போட்டு நன்றாக மாவை பிசைய வேண்டும்.

மாவு கட்டியாக பூரி மாவு பதத்தில் பிசைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாவு கொஞ்சம் லூசாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இன்னும் கொஞ்சம் கோதுமை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. இந்த மாவை ஒரு ஈரத்துணி போட்டு மூடி வையுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து மாவை சின்ன சின்ன உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் வழக்கம் போல குட்டி குட்டி பூரிகளை கொஞ்சம் தடிமனாக திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடானதும் இந்த பூரியை போட்டு பொறித்து எடுத்தால் ஆஹா இதன் வாசமும் சுவையும் வேற லெவல்ல இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: கையேந்தி பவன் தக்காளி சட்னியை வீட்டில் செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து செஞ்சு பாருங்க. கடையில் வாங்கி சாப்பிடுற சட்னிக்கு இதுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே தெரியாது.

பின்குறிப்பு:
இந்த மாவில் தேவை என்பவர்கள் கரம் மசாலா, சாட் மசாலா போன்ற மசாலா பொடி 1/4 ஸ்பூன் அளவு சேர்க்கலாம். அதேபோல கடலை பருப்பை மிக்ஸி ஜாரில் அரைக்கும் போது ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைத்து விடக்கூடாது. அந்த பக்குவத்தையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். மாவு பிசையும் போது கொஞ்சம் லூசாக இருக்கும் பட்சத்தில் பூரியை பொரித்து எடுக்கும் போது எண்ணெய் குடிக்கும்.

- Advertisement -