கையேந்தி பவன் தக்காளி சட்னியை வீட்டில் செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து செஞ்சு பாருங்க. கடையில் வாங்கி சாப்பிடுற சட்னிக்கு இதுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே தெரியாது.

kaiyendhi bhavan tomato chutney
- Advertisement -

தக்காளி சட்னி என்று எடுத்துக் கொண்டால் அதை பல வகைகளில் செய்யலாம் என்றாலும் கூட, கடைகளில் கிடைக்கும் தக்காளி சட்னிக்கென்று தனியாக ஒரு சுவை இருக்கும். இதே சட்னியை வீட்டில் நாம் எப்படி செய்தாலும் அந்த ருசி வராது. ஏதோ ஒன்று குறைவது போன்று உணர்வு நிச்சயம் தோன்றும். இந்த சமையல் குறிப்பு பதிவில் கையேந்தி பவன் கடைகளில் கிடைக்கும். தக்காளி சட்னியை அதே ருசியில் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் சில பொருட்களை அரைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் 1 ஸ்பூன் சீரகம் ,10 சின்ன வெங்காயம் தோல் உரித்தது, 5 பல் பூண்டு தோல் உரித்தது, 7 காய்ந்த மிளகாய்,3 காஷ்மீரி சில்லி, மீடியம் சைஸில் தக்காளி 3 எடுத்து அதை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி இதில் சேர்த்து 1/2 ஸ்பூன் உப்பையும் சேர்த்த பின்பு இதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இதே ஜாரில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இதை நன்றாக லேசான கொரகொரப்பு தன்மையுடன் அரைத்த பிறகு அதை அப்படியே வைத்து விடுங்கள். இப்போது இந்த சட்னியை தயார் செய்து விடுவோம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்த பின்பு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்குங்கள். எண்ணெய் சூடானவுடன் 1 டேபிள் ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு, 1/4 டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து அதையும் பொரிய விடுங்கள்.

அடுத்து இதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து இவை எல்லாம் பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதில் சேர்த்து பின்பு நன்றாக கலந்து விடுங்கள். இப்போது இதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இரண்டு நிமிடம் கை விடாமல் வதக்கினால் இதில் உள்ள பச்சை வாடை முழுவதாக நீங்கி விடும். இப்போது இந்த சட்னியில் மூன்று கப் அளவு தண்ணீர் ஊற்றிய பிறகு உப்பு ஒரு முறை சரிபார்த்து கொண்டு நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடுங்கள். இந்த சட்னி குறைந்தது பத்து நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த சட்னியில் சேர்க்க வேண்டிய இந்த முக்கியமான பொருளை சேர்க்க வேண்டும். அது வேறொன்றுமில்லை நாம் இட்லி தோசைக்கு பயன்படுத்தும் மாவு தான். இந்த மாவு லேசான புளிப்புடன் இருக்க வேண்டும் ஒரே ஒரு சின்ன குழி கரண்டி அளவு மாவு எடுத்து கிண்ணத்தில் ஊற்றி தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த மாவை கொதித்துக் கொண்டிருக்கும் சட்னியில் ஊற்றிய பிறகு 1/4 டீஸ்பூன் வெல்லத்தூளை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

இதையெல்லாம் சேர்த்த பிறகு மீண்டும் இந்த சட்னி ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க வேண்டும். கடைசியாக சட்னியில் உள்ள எண்ணெய் அனைத்தும் பிரிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு லேசாக கொத்தமல்லி தலையை மேலே தூவி விடுங்கள். நல்ல கமகமவென்று வாசத்துடன் கையேந்தி பவன் ஸ்டைலில் இதையெல்லாம் சேர்த்த பிறகு மீண்டும் இந்த சட்னி ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க வேண்டும். கடைசியாக சட்னியில் உள்ள எண்ணெய் அனைத்தும் பிரிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு லேசாக கொத்தமல்லி தலையை மேலே தூவி விடுங்கள். நல்ல கமகமவென்று வாசத்துடன் கையேந்தி பவன் ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: இந்த பருப்பை வச்சு கூட பாயாசம் செய்யலாமா? இதுவரைக்கும் தெரியாம போச்சே என்று யோசித்து இனிமேல் இந்த பாயாசம் தான் அடிக்கடி நம்ம வீட்ல இருக்கும் என்று நீங்களே நினைக்கிற அளவுக்கு ருசியில பிரமாதமா இருக்கும்.

இந்த சட்னிக்கு சுட சுட இட்லி இருந்தால் போதும். நீங்கள் எத்தனை இட்லி சாப்பிட்டீர்கள் என்று தெரியாத அளவிற்கு சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். அது மட்டும் இன்றி இந்த சட்னியை நீங்கள் வீட்டில் செய்வது என்று சொன்னால் யாரும் நம்ப கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு அப்படியே கையேந்தி கடைகளில் கிடைக்கும் சட்னியை போலவே இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -