பூரி சப்பாத்திக்கெல்லாம் பக்கா சைடு டிஷ் ஆன இந்த சென்னா கிரேவியை ஒரு முறை இப்படி வித்தியாசமா செஞ்சு பாருங்க. சென்னா மசாலாவை இப்படி கூட செய்யலாமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

channa masala
- Advertisement -

பூரி சப்பாத்தி இதற்கெல்லாம் பலவகை சைடிஷ் இருந்தாலும், அதற்குகென செய்யப்படும் சென்னா மசாலா எப்போதும் ஒரு தனி சுவையாக தான் இருக்கும். இது சப்பாத்தியை காட்டிலும் சோலா பூரி போன்றவற்றிற்கு இந்த சென்னா மசாலா சரியான காம்பினேஷன் . அதே மசாலாவை கொஞ்சம் வித்தியாசமான முறையில் இப்படி செய்து பாருங்கள். இனி எப்போது பூரி, சப்பாத்தி என எதை சுட்டாலும் இப்படி தான் செய்வீர்கள். வாங்க அந்த ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

மசாலா செய்வதற்கு 200 கிராம் வெள்ளை கொண்டை கடலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் ஒரு முறை தண்ணீர் ஊற்றி அலசிய வடித்த பிறகு குக்கரில் சேர்த்து நான்கு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது அப்படியே ஒரு புறம் இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது இதற்கு ஒரு மசாலாவை தயார் செய்ய வேண்டும். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் சூடானதும் ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய், மூன்று லவங்கம், ஒரு பிரிஞ்சி இலை, அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வெள்ளை எள் இவை அனைத்தையும் சேர்த்து பொரிய விடுங்கள்.

அதன் பிறகு10 சின்ன வெங்காயம், பத்துப் பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், ஒரு மீடியம் சைஸ் தக்காளி, மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் இவையெல்லாம் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடுங்கள். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் இதை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். இப்போது வேக வைத்த கொண்டைக்கடலையும் மட்டும் இதில் சேர்த்து அரைத்த மசாலாவையும் சேர்த்த பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கொண்டை கடலை வேக வைத்த தண்ணீரையும் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழைப்பழத்தை வைத்து இப்படி கூட போண்டா செய்ய முடியுமா? இனிமேல் ஸ்னாக்ஸ்க்கு இந்த போண்டா தான் என்று வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி கேட்பார்கள்

ஒரு பத்து நிமிடம் இது கொதித்த பிறகு பொடியாக அரிந்து வைத்த கொத்தமல்லி தழையை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான கொண்டைகடலை கிரேவி தயார். நாம் எப்போதும் வழக்கமாக செய்யும் சென்னா மசாலாவை விட அதிக ருசியில் இருக்கும். ஒரு முறை இப்படி செய்தால் மறுபடியும் இது போல தான் செய்வீங்க. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -