சன்னா மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம்

channa
- Advertisement -

சன்னா மசாலா பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். அனைத்து ஹோட்டல்களிலும் சன்னா மசாலா கிடைக்கும். ஆனால், அதனை வீட்டில் எப்படி சுலபமாக சமைப்பது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

channa_1

சன்னா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

கொண்ட கடலை – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
வெங்காயம் – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பல்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
தக்காளி – 2
பட்டை – 1
ஏலக்காய் -2
கிராம்பு – சிறிதளவு
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு

சன்னா மசாலா செய்முறை:

சன்னா மசாலா செய்ய முதலில் கொண்டைக்கடலையினை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 8 மணிநேரம் வரை ஊறவைக்கவும் . பிறகு ஊறிய கொண்ட கடலையினை ஒரு குக்கரில் போட்டு 4 முதல் 5 விசில் வரை விடவும்.

- Advertisement -

channa_2

பிறகு மசாலா தயார் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு மற்றும் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து கிளறி பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கவும்.

channa_3

வதக்கிய மசாலாவை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பச்சைமிளகாய் போட்டு தாளித்து அதனுடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை கொட்டி 5 நிமிடம் வரை கொதிக்க விடவேண்டும்.

- Advertisement -

மசாலா நன்றாக கொதித்ததும் அதில் நாம் குக்கரில் வாய்த்த கொண்டைக்கடலையை எடுத்து கொட்டி 5 நிமிடம் வரை மூடி வைக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி எடுத்தால் சுவையான சன்னா மசாலா தயார்.

channa_4

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
குலாப் ஜாமுன் செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:

Here we have Channa masala recipe in Tamil. It is also called as Channa masala seimurai or Channa masala seivathu eppadi in Tamil or  Channa masala preparation in Tamil.

- Advertisement -