குலாப் ஜாமுன் செய்வது எப்படி என்று பாப்போம்

gulab-jamun

குலாப் ஜாமுன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகை. குலாப் ஜாமுன் சாப்பிட மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும் . இதனை வீட்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

gulab_1

குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:

சக்கரை – 1/2 கப்
ஏலக்காய் – 4
பால் பவுடர் – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டேபிள் ஸ்பூன்
பால் – 5 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

குலாப் ஜாமுன் செய்முறை:

முதலில் நாம் குலாப் ஜாமிற்கு உண்டான சக்கரை பாகினை தயார் செய்து கொள்வோம். சக்கரை பாகினை செய்ய நாம் ஒரு கடாயில் சக்கரை போட்டு அதே அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து 8 முதல் 10 நிமிடம் வடை மிதமான சூட்டில் வைக்கவும்.

gulab_2

- Advertisement -

பிறகு அதனுடன் ஏலக்காயினை தட்டி அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். இப்போது சக்கரை பாகு தயார். இப்பொது குலாப் ஜாமுன் செய்ய துவங்கலாம். அதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் கொட்டி அதனுடன் நெய் சேர்த்து மேலும் மைதா மாவு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கிளறவும்.

பிறகு அதில் பால் கலந்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். பிறகு அதனை ஒரு கடாயில் என்னை ஊற்றி அதில் போட்டு நன்றாக செவரும் வரை பொரித்து எடுத்து 4 முதல் 5 மணிநேரம் வரை நாம் ஏற்கனவே தயார் செய்த் சக்கரை பாகில் ஊற வைக்க வேண்டும்.

gulab_3

இப்போது சுவையான குலாப் ஜாமுன் தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடம்
குலாப் ஜாமூனின் எண்ணிக்கை – 12

இதையும் படிக்கலாமே:
எரிசேரி செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Gulab jaamun recipe in Tamil. It is also called as Gulab jaamun seimurai or Gulab jaamun seivathu eppadi in Tamil or Gulab jaamun preparation in Tamil.