எந்த தேதியில் பிறந்தவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் – ஆப்ரிக்க ஜோதிடம் கூறுவது என்ன

astrology

ஜோதிடம் என்பது நமது நாட்டில் எப்படி காலம் காலமாக இருந்துவருகிறதோ அதே போல ஆப்ரிக்க நாட்டில் ஜோதிடமுறை இருந்துவருகிறது. ஆனால் நம்முடைய ஜோதிட முறைக்கும் அவர்களுடைய ஜோதிட முறைக்கும் சில வித்யாசங்கள் உள்ளன. நம்மை பொறுத்தவரை 12 ராசிகள் ஆனால் அவர்களை பொறுத்தவரை 12 உருவங்கள். அதை வைத்தே அவர்கள் ஜாதகத்தை கணிக்கின்றனர். இந்த முறைக்கு ஜியோமன்ஸி என்று பெயர். வாருங்கள் எந்த தேதியில் பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஆப்ரிக்க ஜோதிடப்படி பார்ப்போம்.

ஜனவரி 4 முதல் பிப்ரவரி 3 வரை பிறந்தவர்கள்:

astrology

இவர்கள் பெரும்பாலும் நேர்மறை ஆற்றல் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். மூளையை கொண்டு செய்யப்படும் நுணுக்கமான வேலைகளை எளிதில் செய்து முடிப்பார்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்ட இவர்களிடம் மற்றவரை அதிகாரம் செய்யும் திறமையும் இருக்கவே செய்யும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை, நேர்மை போன்ற நல்லோழுக்கங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிலில் சிலர் பல நேரங்களில் கஞ்சத்தனத்தோடு செயல்படுவார்கள். சில நேரங்களில் இவர்கள் தங்களை பற்றி தாங்களே கலவைக்கொள்வார்கள்.

பிப்ரவரி 4 முதல் மார்ச் 5 வரை பிறந்தவர்கள்:

astrology love

- Advertisement -

இவர்கள் பெரும்பாலும் உடளவில் நல்ல பலசாலிகளாக இருப்பார்கள். தாங்கள் நல்ல வலிமைகொண்டவர்கள் என்பதை அறிந்த இவர்கள் பிரச்சனை வரும்போது மற்றவர்களை வலிமையோடு தாக்கவும் செய்வார்கள். ஆகையால் சண்டை வரும் சமயங்களை இவர்களிடம் சற்று தள்ளி இருப்பது நல்லது. ஆனால் இதற்கு அப்படியே நேர்மாறாக எந்த பிரச்சனைகளிலும் தலையிடாமல் ஒதுங்கிக்கொளும் குணமும் இவர்களிடம் சில நேரம் இருக்கும். தங்கள் வாழ்வில் எத்தகைய தடைகள் வந்தாலும் அவை அனைத்தையும் தகர்த்தெறிந்து முன்னேறும் ஆற்றல் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்களில் பலர் நல்ல அறிவாளிகளாகவும் இருப்பார்கள்.

மார்ச் 6 முதல் ஏப்ரல் 4 வரை பிறந்தவர்கள்:

astrology

இவர்கள் எதையும் பொறுமையோடும் தெளிவோடும் அணுகுவார்கள். நண்பரகளின் வட்டம் இவர்களுக்கு குறுகியது என்றாலும் அவர்களிடம் மிகுந்த அன்போடு பழகுவார்கள். இவர்கள் தங்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்களுக்கு கற்பனை திறன் சற்று அதிகமாக இருக்கும். எவரேனும் இவர்களை பாராட்டினால் உடனே அதற்க்கு மயங்கிவிடுவார்கள். பல நேரங்களில் இவர்கள் அமைதியாக தனிமையில் இருப்பார்கள்.

ஏப்ரல் 5 முதல் மே 4 வரை பிறந்தவர்கள்:

astrology

எல்லோரிடமும் அன்பு பாராட்டும் குணம் இவர்களுக்கு உண்டு. அனைவரிடமும் எளிதாக பேசி நண்பர்கள் ஆகிவிடுவார்கள். எத்தகைய வேலையாயினும் அதை திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். பிரச்சனைகளை கண்டு அஞ்சும் குணம் கொண்ட இவர்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை கண்டு ஓடுவார்கள். இவர்களின் திறமை காரணமாக இவர்கள் மேல் பலர் பொறாமை கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்.

மே 5 முதல் ஜூன் 4 வரை பிறந்தவர்கள்:

astrology

எவ்வளவு பெரிய பிரச்சனைக்கு தீர்வு பேச்சுவார்த்தையும் சமாதானமாக செல்வதுமே என்ற எண்ணம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். எல்லோரிடமும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். பார்ப்பதற்கு சற்று முரட்டு சுபாவம் கொண்டவர்கள் போல இருந்தாலும் இவர்களின் மனம் மென்மையானதாக இருக்கும். இவர்கள் நல்ல திறமையோடு செயல்பட்டு வாழ்வில் முன்னேற எண்ணுவார்கள்.

ஜூன் 5 முதல் ஜூலை 4 வரை பிறந்தவர்கள்:

astrology

நல்ல திறமைசாலியான இவர்கள் சில நேரங்களில் எந்த வேலையையும் முழுமையாக செய்துமுடிக்க மாட்டார்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வு சற்று மேலோங்கியே இருக்கும். சில நேரங்களில் இவர்கள் மற்றவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்ற துடிப்பு இவர்களிடம் இருக்கும். ஆனால் இவர்கள் செய்யும் வேலைகள் சில நேரம் பிறருக்கு வேடிக்கையாக இருக்கும்.

ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4 வரை பிறந்தவர்கள்:

astrology

இவர்கள் சூழலுக்கு ஏற்றவாறு வாழும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைவந்தாலும் அதை சமாளிக்கும் தைரியம் இவர்களிடம் இருக்கும். எதிர்காலம் குறித்து நன்றாக திட்டமிட்டு அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை இவர்கள் அமைத்துக்கொள்வார்கள். தன் மனதிற்கு பிடித்தவர்கள் மீது அதிக அன்பு கொண்டு அவர்களை எப்போதும் இவர்கள் நேசிப்பார்கள்.

ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 4 வரை பிறந்தவர்கள்:

astro wheel

இவர்கள் அறிவாளிகளாக இருந்தாலும் எந்த ஒரு முடிவையும் சரியாக எடுக்க தெரியாமல் தடுமாறுவார்கள். சில நேரங்களில் தவறான முடிவை எடுத்துவிட்டு பின் வருந்துவார்கள்.மிக சிறந்த நண்பர்களை கொண்ட இவர்கள் எந்த வேலையையும் திறம்பட செய்து பிறரின் நம்பிக்கையை பெறுவார்கள். கடனை வாங்கி வாழ்க்கை நடத்துவது இவர்களுக்கு பிடிக்காது. ஆனலும் சில நேரங்களில் நெருக்கடியால் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.

செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 4 வரை பிறந்தவர்கள்:

astrology

இவர்கள் பெரும்பாலும் சுயமாக முடிவெடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே போல எப்போதும் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும். தவறை தட்டிக்கேட்கும் குணம் இவர்களிடம் இருக்கும். இவர்களில் பலர் மிக விரைவாக முன்னேறிவிடுவார்கள். அதனால் இவர்கள் மீது மற்றவர்களுக்கு சற்று பொறாமையும் இருக்கும்.

அக்டோபர் 5 முதல் நவம்பர் 4 வரை பிறந்தவர்கள்:

 

astrology-wheelபிறரை காட்டிலும் இவர்கள் சற்று வித்யாசமாக யோசிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்ப்பார்கள். இவர்கள் சற்று கோவக்காரர்களாக இருப்பார்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் இவர்கள் தேவை இல்லாமல் தலையிட மாட்டார்கள். எந்த ஒரு திட்டத்தையும் சிறப்பாக தீட்டி அதில் வெற்றி காணுவார்கள். அனுபவமே இவர்களின் சிறந்த ஆசானாக இருக்கும்.

நவம்பர் 5 முதல் டிசம்பர் 4 வரை பிறந்தவர்கள்:

astrology-wheel

கடின உழைப்பாளிகளான இவர்கள் வாழ்வில் முன்னேற்ற பாதையில் செல்வார்கள் ஆனால் தன் சொந்தங்களோடு இவர்கள் செலவிடும் நேரம் சற்று குறைவாகவே இருக்கும். சில நேரங்களில் தேவை இல்லாத சிந்தனைகள் இவர்கள் மனதில் எழும் அதன் காரணமாக இவர்களுக்கு சில பிரச்சனைகளும் வர வாய்ப்புண்டு. பணம் சற்று அதிகமாக இருந்தால் ஆடம்பர செலவில் ஈடுபடுவார்கள்.

டிசம்பர் 5 முதல் ஜனவரி 3 வரை பிறந்தவர்கள்:

astrology

இவர்கள் எந்த அளவிற்கு சம்பாதிக்கிறார்களோ அதே அளவிற்கு செலவையும் செய்வார்கள். தங்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்ல இவர்கள் துடிப்பார்கள். பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் இவர்களிடம் சற்று குறைவாக இருக்கும். பிரச்சனைகளை கண்டு பெரும்பாலும் இவர்கள் அஞ்சுவார்கள்.